என்னாமா....குவ்ராங்கய்யா... ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் -BJPதமிழக பாரதீய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தில் மத்திய மந்திரி நிதீன் கட்காரி அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* விவசாயக்கடன் ரத்து, மஞ்சள் நல வாரியம் அமைக்கப்படும்
* வீடில்லா நெசவாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்
* தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்
* அரசாங்கமே மணல் விற்பனை செய்யும்
* வீடில்லா நெசவாளர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்
* ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும்
* சூரிய ஒளி மின்சார தயாரிப்புக்கு 50 சதவிகித மானியம் தரப்படும்
* கரும்பில் இருந்து எத்தனால் எடுக்க அனுமதி அளிக்கப்படும்
* மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ. 16,000 நிர்ணயம் செய்யப்படும்
* பாரதீய ஜனதா அட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்
* விவசாயிகள் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும்
* ஊழல் இல்லாத ஆட்சி
* அருந்ததியர் நலவாரியம் அமைக்கப்படும்
* வீட்டிற்கு 20 லிட்டர் சுத்திகரிக்கபட்ட குடிநீர் வழங்கப்படும்
* விவசாய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்
* சத்தீஷ்கர் மாநிலம் போல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு திட்டம் கொண்டு வரப்படும்
* ஏழை பெண்கள் திருமணத்திற்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கப்படும்
* வெளிநாடுவாழ் தமிழர்களின் பாதுகாப்புக்கு சிறப்பு அமைப்பு
* பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
* தமிழகத்தில் மத்திய அரசின் உதய் மின் திட்டம்அமல்படுத்தப்படும்
* லோக் ஆயுக்தா திட்டம் கொண்டு வரப்படும்
* கோவில் சொத்துகள் 8 மாதத்தில் மீட்கப்படும்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.