விபச்சார சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெண்கள் - மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகமனதை உருக்கும் காட்சிகள்
அன்மையில் இணையத்தில் மனித ஏற்றுமதி ( Human cargo ) என்ற ஒரு கட்டுரை வாசிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது . இவற்றை வைத்து காலத்தின் தேவைக்கேற்ப இந்தக் கட்டுரையை நான் எழுதியுள்ளேன் .
மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாக
மனிதன் என்ற பெறுமதி சீர் குழைந்து விடும் . மனித சமூகத்தில் விபச்சாரம் மலிந்துவிடும் . அது அச்சமூகத்தின் கண்களை குறுடாக்கிவிடும் . என்று நான் பல நபி மொழிகளை நாங்கள் பார்த்தும் வாசித்தும் இருக்கின்றோம் .
ஜாஹிலியா காலத்தில் மனிர்களை அடிமையாக சந்தைகளில் விற்பனை செய்யப் பட்டார்கள் . அதே நிலை இன்று வர்த்தக நோக்கத்திற்காக ( விபச்சாரம் ) மனித ஏற்றுமதிச் சந்தை ( Human Cargo ) என்று மறுபடியும உலகில் பல ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளிலும் அரச அங்கிகாரத்துடன் தோற்றம் பெற்று சிறப்பாக இயங்கியும் வருகின்றது . இதற்கு அந்த நாடு அரசாங்கம் மெளனமான அங்கிகாரத்தை வழங்கி அதை மறைமுகமாகவும் ஊக்கங்களையும் கொடுத்து வருகின்றது . ( விபச்சாரம் ) தகாத பாலியல் உறவுகள் சமூக சீர்குலைவுக்கும் குடும்ப உறவில் பாரியதோர் நடத்தைப் பிறழ்வை உருவாக்கும் என்று தெரிந்தும் அங்கிகாரம் வழங்குவது மனதிற்கு வேதனையாகத்தான் உள்ளது .
இப்படி ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் இருந்த வணிகம் இன்று ஆசியா நாடுகளிலும் பரவி மிகவும் துள்ளிதமாக செயற்பட்டுக் கொண்டும் வருகின்றது . அதற்கு சில நாடுகளில் தமது தேசிய வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள அரசாங்கம் விபச்சாரத்தை சட்ட பூர்வமாக ஆக்கி வருகின்றது . #சீனாவின் பீஜிங் , ##தாய்லாந்தின் பெங்கொக் , #இந்தியாவின் மும்பாய் , #மியன்மாரின் ரங்கூன் , #இலங்கையின் பென்தோட்டை என விபச்சாரத்திற்குப் பெயர் போன நகரங்களாக அடையாளப்படுத்தப் பட்டுள்ளது . அதேபோல் முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றான #ஜப்பானில் பல்கலைக்கழக மாணவிகள் மேலதிக வருமானத்தைப் பெறுவதற்காக பகுதி நேர பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக சில யுனிசெப் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றது .
இன்று பாலியல் தொழில் நடைபெறும் இடங்கள் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றது . #இரவு நேர விடுதிகள் , #பெரும் நச்சத்திர ஹோடல்கள் , #மதுபான தவறணைகள் , #உல்லாச விடுதிகள் ,
#மசாஜ் சென்டர்கள் , சில பல்கலைக் கழகங்கள் , #நடமாடும் வாகனங்கள் என்று பல இடங்களில் சமூக சீரழிவு நடைபெறுகின்றது .
சமீபத்தில் யுனிசப் நிறுவனத்தின் அறிக்கையின் படி உலகில் அதிக விபச்சாரிகளைக் கொண்டுள்ள நாடு #இந்திய என மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது . இப்படியான விபச்சாரத் தொழிலுக்காக #சீனா
மற்றும் இந்தியாவில் சில கராமப் புறங்களில் #பெண்பிள்ளைகளை சிறு வயதிலேயே பாலியல் வடுதிகளுக்கு விற்பனை செய்யும் மரபும் இருந்து வருகின்றது . இதற்கு சமூக அழுத்தம் ( வறுமை , சாதிப் பாகுபாடு ) மட்டுமல்லாது சமைய ரீதியான நம்பிக்கைகளும் இவ்வாறான மரபுக்கு துணை புரிகின்றது .
இப்போது #வியட்நாம் ,#சீனா , #லாவோஸ் ,#கம்போடியா நாடுகளிலும் #மும்பாய் சிவப்பு விளக்குப் பகுதிகளிலும் கணிசமான சிறுவர்கள் பாலியல் துறையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள் இவர்கள் ஆகக் குறைந்த ஊதியமாக 20 அமெரிக்க டொலருக்கு பயன்படுத்தப் படுகின்றார்கள் .
தெற்கு மற்றும் தென்கிழக்காசியா நாடுகளில் பாலியல் தொழிலாளிகளைக் கொள்வனவு செய்பவர்கள் #ஜப்பானியர்களும் ,#மேற்கு நாட்டவர்களுமே . தூர கிழக்கு நாடுகளில் இருந்து அதிகமான விபச்சாரிகளை இறக்குமதி செய்கின்றவர்களில் ஒப்பீட்டு ரீதியில் அதிகமானோர் ஜப்பானியர்களே உள்ளனர் . இதன்படி தற்போது 3 லட்சத்திக்கும் அதிகமான வெளிநாட்டு விபச்சாரத் தொழிலாளர்கள் ஜப்பானில் தங்கியுள்ளனர் . அதில் 50% மானோர் பிலிபைனியர்கள் எனவும் 40% மானோர் தாய்லாந்தியர் எனவும் அறிக்கை கூறுகின்றது .
அதேபோல் தூரகிழக்கில் பாலியல் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா விளங்குகின்றது . இலங்கை ,இந்தியா , மாலைதீவு போன்ற வறிய நாடுகளில் சீனா விபச்சாரிகள் மிகக் குறைந்த ஊதியத்துக்குப் பணியாற்றுகின்றனர் . இதில் இருப்பவர்கள் 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகள் , பல்கலைக்கழக மாணவிகள் , பிரபலமான சினிமா நட்சத்திரங்கள் என்று பல்வேறு பெயர்களில் விபச்சாரிகள் ஐரோப்பிய மற்றும் ஆசிய சந்தைகளிலும் நடமாடுகின்றார்கள் .
அதேபோல் இன்று இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு உளைக்கச் செல்லும் சில பணிப் பெண்களும் இப்படியான வெளிநாட்டு விபச்சாரத் தரகர்களிடம் சிக்கி அவர்கள் வெளிநாட்டு சந்தையில் விற்கப்படுவதாகவும் . மற்றும் பருவ வயது அடையாத பெண் பிள்ளைகளை சில கெமிகல்ஸ் மருந்துகளைக் கொடுத்து பருவ வயதை அடைய வைத்து அவர்களை பாலியல் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் பல தகவல்கள் ஊடகங்களுக்கு வெளியாகியுள்ளது .

 

குறிப்பு :- வெளிநாட்டிற்கு வேலை செய்வதற்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும் .
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.