மீண்டும் மணிப்பூரில் முஸ்லிம் இளைஞர்கள் மீது தாக்குதல் – இருவர் பலிமணிப்பூரில் ஹோலி பண்டிகையை காணச்சென்ற முஸ்லிம் இளைஞர்கள் ஆறு பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த சம்பவத்திற்கு காரணமான எவர் மீதும் எந்த ஒரு நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படாத நிலையில் இது அப்பகுதி மதவாதிகளுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

நேற்று (வியாழன்) மாலை மயாங் இம்பால் யாங்பி தோட்டத்தில் சுமார் 4:30 மணியளவில் தோட்டத்தில் இருந்து வெளியே வந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான மூன்று இளைஞர்களில் இருவர் உயிரிழந்துவிட்டனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் முஹம்மத் சதாம் (வயது 23) மற்றும் முஹம்மத் ஃபாரூக் (வயது 22) என்று கண்டறியப்பட்டுள்ளது.இவர்கள் இருவரும் லிலாங் கலீகொங் பகுதியை சேர்ந்தவர்கள். படுகாயமடைந்த மற்றொருவரான முஹம்மத் சபீர் (வயது 19) லிலாங் அவாங் லிகாய் பகுதியை சேர்ந்தவராவார். இந்த மூன்று பேரும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 25 ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் தற்பொழுது நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல் ஆகியவை மணிபூர் வாழ் முஸ்லிம்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் இளைஞர்கள் மீதான தாக்குதலை ஊடகங்களும் கூட பெரிதும் கண்டுகொள்ளவில்லை. மேலும் அரசாங்கமும் இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த தாக்குதல் குறித்து முதல்வரோ அல்லது அப்பகுதி எம்.எல்.ஏ. களோ இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பொதுவாகவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை புறம்தள்ளும் ஊடகங்கள் தற்பொழுது பாதிப்பிற்குள்ளானவர்கள் முஸ்லிம்கள் என்பதனால் அதை கண்டுகொள்வதேயில்லை.

1993 மே கலவரத்திற்கு பிறகு மணிப்பூரில் வாழும் முஸ்லிம்கள் பல இடர்பாடுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். தற்போதைய தாக்குதல்கள் முஸ்லிம்கள் அப்பகுதியில் குறிவைக்கப் படுகின்றனரோ என்கிற அச்சம் எழுகிறது.

 

 

Thanks To:  Puthiya Vidial

 

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.