‘வந்தே மாதரம்’தான் உண்மையான தேசியகீதம் - ஆர்.எஸ்.எஸின் அடுத்த உளரல்.உண்மையான தேசிய கீதம் வந்தே மாதரம்தான் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி கூறியுள்ளார். மும்பையில் உள்ள தீனதயாள் உபாத்யாயா ஆராய்ச்சி மையத்தில்  நடந்த நிகழ்ச்சில் கலந்து கொண்டு பேசியபோது ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி கூறியதாவது: தற்போது ஜன கன மன நமது தேசிய கீதமாக இருக்கிறது. அதை மதிக்க வேண்டும். அரசமைப்பு சட்டத்தின்படி முடிவு செய்யப்பட்ட தேசிய கீதம் அது. அதன் உண்மையான அர்த்தத்தை ஒருவர் ஆராய்ந்தால், பிறகு ‘வந்தே மாதரம்’தான் உண்மையான தேசிய கீதம் ஆகும்.  ஜன கன மன எப்போது எழுதப்பட்டது? சில காலத்துக்கு முன்பு அது எழுதப்பட்டது.

ஆனால் ஜன கன மன பாடலில் உள்ள உணர்வுகள் நாட்டை மனதில் வைத்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் வந்தே மாதரம் பாடலில் உள்ள உணர்வுகள் நாட்டின் பண்பு மற்றும் நாட்டின் பாணியை (ஸ்டைல்) மனதில் வைத்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டுமே மதிக்கப்பட வேண்டியவைதான்.  இவ்வாறு ஜோஷி கூறினார். பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்தை எழுப்பும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கும் நிலையில் ஜோஷி இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.