உலகப் பெண்களே! பர்தாவுக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருப்பது உங்களுக்கு தெரியுமா?ஓய்வு நேரத்தில் கணினி ஆய்வகத்தில் அமர்ந்து, இண்டர்நெட்டில் குறிப்பெடுத்துக்கொண்டிருந்தாள் பொறியியல் மாணவி பாத்திமா. குறிப்பெடுத்துக் கொண்டிருந்தவளிடம்‘பாத்திமா.. உன்னை ஹெச்.ஓ.டி அவங்க ரூம்ல வந்து பாக்கச் சொன்னாங்கடி..’ என சொல்லிச் சென்றாள் பாத்திமாவின் வகுப்புத் தோழி திவ்யா.
உடனே கம்ப்யூட்டரை ஆஃப் செய்துவிட்டு, ஹெச்.ஓ.டி அறைக்குச் சென்ற பாத்திமா அறையின் வாசலில் நின்று கொண்டு ‘மேய் ஐ கம் இன் மேடம்…’ என்றாள்.
ஹெச்.ஓ.டி திலகவதி ‘எஸ்.. கம் இன்..’ என்று பதிலளித்து அறையினுள் வர அனுமதியளித்தார்.
‘மேடம் உங்களை வந்து பார்க்கச் சொன்னதா திவ்யா சொன்னா…’
‘எஸ்.. பாத்திமா நான்தான் வரச் சொன்னேன்.டேக் யுவர் சீட்..’
‘தேங்க்யூ மேம்..’
‘பாத்திமா.. வழக்கம்போல இந்த செமஸ்டர்லையும் நீதான் ஃபர்ஸ்ட் மார்க் போல…? என்றுஹெச்.ஓ.டி கேட்டதும் மலர்ந்த முகத்தோடு,‘ஆமாம் மேடம்..’ என்று பதிலளித்தாள் பாத்திமா.
ஹெச்.ஓ.டி,‘வெரி குட்.. கீப் இட் அப்..’ என்றதும் அதே முக மலர்ச்சியோடு,‘தேங்க்யூ சோ மச் மேடம்..’ என்றாள்.
‘அண்ட் ஒன் மோர் திங் பாத்திமா..நம்ம காலேஜ் ஸ்டூடன்ஸ் அசோசியேஷனுக்கு நீதானே செகரட்ரி..?
‘எஸ்.. மேடம்.. ஏன் கேட்கிறீங்க…?’
‘நம்ம காலேஜ்ல புதுசா ஒரு ரூல்ஸ் வரப் போகுது.. அதைப்பற்றி பேசத்தான் வரச் சொன்னேன்..’என்று ஹெச்.ஓ.டி சொன்னதைக் கேட்டதும் காலேஜ் ரூல்ஸைப் பத்தி நம்மிடம் என்ன பேசப் போறாங்க..?’ என்று குழம்பிய பாத்திமா,
‘என்ன ரூல்ஸ் மேடம்..?காலேஜ் ரூல்ஸ் பற்றி என்னிடம் என்ன பேச வேண்டும்..?’ என்றுஹெச்.ஓ.டியிடம் நேரடியாகக் கேட்டாள்.
‘நேற்று நடந்த மீட்டிங்கில் பிரின்ஸ்பால் புதுசா ஒரு ரூல்ஸ் கொண்டு வரப்போரதா சொன்னாங்க.. முஸ்லிம் ஸ்டூடன்ஸ் யாரும் இனிமேல் பர்தா போட்டுக் கொண்டு காலேஜ்க்கு வரக்கூடாதுனு ரூல் வரப் போகுதாம்.. இதைப்பற்றி ஏதாவது ஒரு முஸ்லிம் ஸ்டூடண்ட்கிட்ட பேசி அவங்க என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சுக்க ஆசைப்பட்டேன். அதனால்தான் உன்னை வரச் சொன்னேன் பாத்திமா…’ என்று ஹெச்.ஓ.டி சொன்னதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து போனாள் பாத்திமா.
‘என்ன மேடம் சொல்றீங்க..? எதுக்கு திடீர்னு இப்படி ஒரு ரூல்;…?’
‘மத அடையாளங்கள் கல்லூரிக்குள் இருக்கக்கூடாது, மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து இளைய சமுதாயத்தை மீட்க வேண்டும், பெண்ணடிமைத்தனத்தைப் போக்க வேண்டும், எல்லோரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த புது ரூலை கொண்டு வரப்போறாங்க…’ என்று ஹெச்.ஓ.டி சொல்லி முடிப்பதற்குள், ‘இது ரொம்ப அநியாயம் மேடம்…’என்று ஆவேசப்பட்டாள் பாத்திமா.
‘அநியாயமா? என்ன சொல்ற பாத்திமா? இது ஒரு வகையில் உங்களுக்கு நன்மை தரக்கூடியவிஷயம்தானே? உங்க வீட்ல உன்னை கட்டாயப்படுத்தி பர்தா அணியச் சொல்றதுனாலதான நீ அணியுறா..? இனி இந்த தொல்லை இல்லைனு நீ உண்மையில் சந்தோஷம்தான் அடையவேண்டும்…’
‘இல்லை மேடம் பர்தாவை நான் விரும்பித்தான் அணிகிறேன்.. என்னை பர்தா போடச் சொல்லி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. இஸ்லாத்தில் எந்த விஷயத்திலும் நிர்பந்தமும் இல்லை..’ என்று பாத்திமா சட்டென பதிலளித்தது ஹெச்.ஓ.டிக்கு வியப்பை ஏற்படுத்தியது.
‘என்னது? பர்தாவை விரும்பித்தான் அணியுறியா? பொய் சொல்லாதே பாத்திமா..’
‘இல்லை மேடம்.. பொய் சொல்லவில்லை.. நிஜமாத்தான் சொல்றேன். பர்தாவை விரும்பித்தான்அணிகிறேன்… வேறு எந்த உடையிலும் கிடைக்காத கண்ணியம் எனக்கு இந்த உடையில்கிடைக்கிறது மேடம்..இதை நான் அனுபவத்தில் சொல்கிறேன்..சும்மா பேச்சுக்காகசொல்லவில்லை..’
பாத்திமா மிகவும் யதார்த்தமாக பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஹெச்.ஓ.டி.,‘என்னைப்பொறுத்தவரை பர்தா என்பது பெண்ணடிமைத்தனத்தின் ஒரு வகைதான். இஸ்லாத்தில் உள்ள எத்தனையோ நல்ல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால் எனக்கு இஸ்லாத்தில் பிடிக்காத ஒன்று பெண்களைத் திரையிட்டு மறைப்பதுதான்..’ என்றார்.
‘நீங்கள் தவறாக புரிந்திருக்கிறீர்கள் மேடம்.. பர்தா பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு அல்ல.. உண்மையில் பர்தா பெண்களை கௌரவிக்கத்தான் செய்கிறது. நீங்கள் நினைக்கிற மாதிரி திரையிட்டு மறைத்து அடிமைப்படுத்தவில்லை. இஸ்லாம் பெண்களுக்கு கல்வியுரிமை,சொத்துரிமை, விவாகாரத்து உரிமை, திருமணக் கொடையுரிமை என எத்தனையோ உரிமைகளை வழங்கி பெண்களை கௌரவிக்கிறது. அதே மாதிரிதான் மேடம் பர்தாவின் மூலமாகவும் இஸ்லாம் பெண்களை கண்ணியம் செய்கிறது…’
‘அப்படி என்ன கண்ணியம் இந்த பர்தாவில் இருக்கு…?’
‘எவ்வளவோ இருக்கு மேடம்…ஒரு பெண்ணுக்கு எல்லா உரிமையையும் கொடுத்து அவளோடபாதுகாப்புக்கு கியாரண்டி தர்றதுதான் உண்மையான கண்ணியம்.. அந்த கண்ணியத்தை இஸ்லாம் பர்தா மூலமா பெண்களுக்கு வழங்கியிருக்கு…அதைப் பற்றி சொல்றதுக்கு முன்னால பர்தானா என்ன? அதோட வரைமுறை என்னவென்று நீங்க தெரிஞ்சுக்கணும் மேடம்…’
‘சொல்லு பாத்திமா.. தெரிஞ்சுக்குறேன்..’
‘சொல்றேன் மேடம்.. நீங்க நினைக்கிற மாதிரி இஸ்லாம் பெண்களை திரையிட்டு மறைக்கச்சொல்லவில்லை.. பெண்கள் தங்களோட முகம் மற்றும் இரண்டு முன் கைகள் மட்டும் தெரியும்படி ஆடை அணிய வேண்டுமென்றுதான் இஸ்லாம் சொல்லுது…உலகத்துல இருக்கிற எல்லா பெண்களும் அந்தந்த நாட்டுல வழக்கத்துல இருக்குற ஆடைகளைத்தான் அணியுறாங்க…பெண்களுக்கு ஒரு பிரத்யேகமான உடையை வடிவமைத்து இதைத்தான் உலகத்தில் உள்ள எல்லா முஸ்லிம் பெண்களும் அணிய வேண்டுமென்று இஸ்லாம் நிர்பந்திப்பதில்லை. இந்தியாவில் இருக்குற முஸ்லிம் பெண்களும் புடவைதான் கட்டுறாங்க..பெண்கள் விதவிதமான, கலர்கலரான ஆடைகள் அணிவதையோ, தன்னை அழகு படுத்திக் கொள்வதையோ இஸ்லாம் தடுக்கவில்லை.பெண்களின் இந்த சுதந்திரத்திலெல்லாம் இஸ்லாம் தலையிடவில்லை. இஸ்லாம் சொல்ற ஒரே கண்டிஷன் அந்நிய ஆண்களுக்கு முன்னாடி முகம் மற்றும் இரண்டு முன் கைகள் தவிர மற்றபகுதிகளை மறைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். எல்லா பெண்களை மாதிரியும் முஸ்லிம் பெண்கள் புடவை, சுடிதார் போன்ற ஆடைகளை அணியத்தான் செய்கிறாங்க… தன்னை அழகுபடுத்திக் கொள்றாங்க… வெளியே எங்கையாவது போகும் போதுதான் பர்தா போடுறாங்க மேடம்… 24 மணிநேரமும் பர்தா அணிய வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட்டிருந்தால் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்று நீங்கள் சொல்லாம், ஆனால் அந்நிய ஆண்கள் முன்னிலையில் மட்டுமே இஸ்லாம் சில வரையறைகளை கடைப்பிடிக்கச் சொல்லுது.. மற்றபடி வீட்டில் தன் தந்தை, சகோதரர்கள் முன்னிலையிலும், கணவன் முன்னிலையிலும் கூட பர்தாவோடுதான் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லாதபோது எப்படி மேடம் பர்தாவை பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமாகச் சொல்ல முடியும்?
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.