ஹாஷிம்புரா' படுகொலை தீர்ப்பு : முஸ்லிம்களின் முதுகில் குத்திய துரோகம் !அப்பாவி முஸ்லீம்களைக் கடத்தி சென்று, படுகொலை செய்த இந்து மதவெறி போலீஸ் கிரிமினல்களை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடே வழக்கு நடத்தப்பட்டு, தீர்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.


தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் 28 ஆண்டுகளாகக் காத்திருந்து, அதற்காகப் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு, அதற்காகப் போராடி வந்தவர்களை எள்ளிநகையாடும் விதத்தில் இன்னொரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

1987-ல் நடந்த ஹாசிம்புரா முஸ்லீம் படுகொலை வழக்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த இந்து மதவெறி பிடித்த போலீஸ் மிருகங்கள் அனைவரையும் விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அநீதியானது.

1987, மே 22 அன்று மீரட் நகரில் முசுலீம்கள் நெருக்கமாக வாழ்ந்துவந்த 'ஹாசிம்புரா' பகுதியைச் சுற்றிவளைத்த பிரதேச ஆயுதப் படையைச் சேர்ந்த 41 ஆவது பாட்டாலியன் பிரிவு, முசுலீம்கள் அனைவரையும் வீட்டைவிட்டு வெளியேறுமாறும், தவறினால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்றும் உத்தரவிட்டது.

வீட்டைவிட்டு வெளியேறிய ஆண்,பெண், குழந்தைகள், முதியவர்கள் அனைவரும் நடுத்தெருவில் துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டனர்.

காலியாக இருந்த வீடுகளினுள் புகுந்து தேடுதல் வேட்டை நடத்திய ஆயுதப் படை போலீசார் வீட்டினுள் இருந்த உடமைகளைச் சேதப்படுத்தியதோடு, பணம், நகைகளைக் கொள்ளையடித்தனர்.

இளவயது முசுலீம்களுள் 42 பேர் பிரதேச ஆயுதப் படை போலீசாரால் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டனர்.

சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டு, கடத்திச் செல்லப்பட்ட 42 நபர்களை முராத் நகரில் உள்ள மேல்கங்கை கால்வாய் பகுதியில் நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராகச் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர்களின் சடலங்கள் அக்கால்வாயில் வீசியெறியப்பட்டன.

இதுதவிர, கடந்த இருபது, இருபத்தைந்து ஆண்டுகளில் நாடெங்கும் ஆயிரக்கணக்கான முசுலீம்கள் போலீசாரால் எவ்வித ஆதாரமுமின்றித் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு, போலி மோதல்களில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இக்கொலை வழக்குகளுள் ஒருசில, நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில் ஹாசிம்புரா குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருப்பது போலீசார் இந்து மதவெறியோடு நடத்திவரும் படுகொலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிர்வாதமேயாகும்.


hasimpura hashimpura_759


நன்றி : வினவு.

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.