முத்துப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி கணவன்–மனைவி பலிதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கீழ நம்மங்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம் (45). இவரது மனைவி ஜெயா (40).

இவர்கள் இருவரும் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டு வந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலை பின்னத்தூர் வளைவு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே வந்த போது முத்துப்பேட்டையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு பழங்கள் ஏற்றிக் கொண்டு மினிவேன் வந்தது.

இந்த வேன் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் கல்யாண சுந்தரம், ஜெயா ஆகியோர் சம்பவ இடத்திலே இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் உறவினர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி. கண்ணதாசன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் கல்யாண சுந்தரம், ஜெயா ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் பேராவூரணியை சேர்ந்த சிரஞ்சீவியை கைது செய்தனர். மறியல் காரணமாக 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

20160411020702
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.