ஷார்ஜாவில் ஆட்டிசம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சார்ஜா இந்தியன் அசோசியசன் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அல் நஜ்மா மையம் ஏற்பாடு செய்திருந்தது.
ஷார்ஜாவில் மனநலக் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மனநலக்குறைபாடு குறித்த விழிப்புணர்வும், அதனை தவிர்க்கும் வழிமுறைகள் பற்றியும் விவரித்தனர்.
இதில் கிரீன் குளோப் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஹுமைத் ஹபீப் தலைமையில் பங்கேற்றனர். ஹாரித் என்ற மாணவர் மனநலக் குறைபாட்டை தவிர்க்கும் முறை குறித்த உரை நிகழ்த்தியது பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது.
இந்த மாணவர்கள் அனைவரும் மனவளர்ச்சி குறைந்த மாணவர்களுடன் உரையாடும் சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.




0 comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.