சட்டமன்ற தேர்தல்: தே.மு.தி.க.–மக்கள்நல கூட்டணிக்கு, "இந்திய தேசிய லீக்" கட்சி ஆதரவுஇந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரகீம், மக்கள்நல கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் வைகோ, தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரை ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் சந்தித்து தே.மு.தி.க.–மக்கள்நல கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.

தலைவர்களை சந்தித்து வெளியே வந்த தடா ஜெ.அப்துல் ரகீம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

19 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை தே.மு.தி.க.–மக்கள்நல கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று கேட்டோம்.

நாங்கள் கேட்க ஆரம்பித்ததும், வைகோ எங்களிடம் நாங்கள் ஏற்கனவே உங்கள் கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் சேர்த்திருப்பதாக கூறினார். இதையடுத்து, அவர்களுக்கு இந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்து இருக்கிறோம்.  இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.