முத்துப்பேட்டை அருகே பைக் மோதி பந்தல் போடும் தொழிலாளி பலி.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் நடேசன் மகன் மாரியப்பன்(48). பந்தல் போடும் தொழிலாளியான இவர் வேலை முடித்துவிட்டு சைக்கிளில் பாமினி ஆற்று பாலம் அருகே சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த வாட்டாக்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகவேல் ஓட்டி வந்த பைக் மாரியப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசிப்பட்ட மாரியப்பன் அருகே இருந்த பாலத்தின் தடுப்பு கம்பியில் மோதி தலைப்பகுதி பிளந்து படுகாயம் அடைந்தார். உடன் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி மாரியப்பன் இறந்தார். இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து பைக் ஓட்டி வந்த வாட்டாக்குடி முருகவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.