முத்துப்பேட்டை பங்களாவாசல் அருகே தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டம்முத்துப்பேட்டை அருகே தனியார் பஸ்சை சிறைபிடித்து அப்பகுதி இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் நாச்சிக்குளத்தை சேர்ந்த சில இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் காரில் ஆசாத்நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நாகையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பஸ், இளைஞர்கள் சென்ற கார் மீது மோதுவதுபோல் சென்றது. உடனே அந்த பஸ்சை,  வழிமறித்து நிறுத்தி காரில் சென்ற இளைஞர்கள் கேட்டபோது, தனியார் பஸ் டிரைவர் அப்படிதான் செல்வேன் என்றும், ஒரு இளைஞரை பார்த்து உன் மீது மோதாமல் விடமாட்டேன் என்றும் கூறியதாக தெரிகிறது.

அதன் பின்னர் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் வாகனங்களில் சென்ற போதெல்லாம் அந்த தனியார் பஸ் அவர்கள் மீது மோதுவது போன்றே சென்றது. இதனால் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் அந்த இளைஞர்களுக்கு ஆதரவாக நேற்று பங்களாவாசல் பஸ் நிறுத்தம் அருகே தனியார் பஸ்சை வழிமறித்து நிறுத்தி தகராறு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. பின்னர் அந்த தனியார் பஸ்சின் பிரச்னைக்குரிய டிரைவர் தற்போது வராததால், அவர் வந்த பிறகு பேசி முடிவு செய்து கொள்வோம் என்று அங்கு வந்த போலீசாரும், மற்ற பேருந்து டிரைவர்களும் கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.