அதிரையில் வங்கி கணக்கில் நூதன முறையில் பண மோசடி !தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மத்திய வங்கி கிளை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 23 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். டைலர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ராணி ( வயது 35 ). அதிரையில் இயங்கும் அரசுடமையாக்கப்பட்ட மத்திய வங்கி கிளையில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவரது வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் ரூ. 23 ஆயிரம் மோசடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ராணி நம்மிடம் கூறுகையில்...
நேற்று 12 ந்தேதி செவ்வாய்கிழமை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு, தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் தலைமையகத்தின் மேலாளர் பேசுவதாக என்னிடம் கூறினார். உங்களது ஏடிஎம் கார்டை புதுப்பித்து வழங்க இருக்கிறோம். எனது ஏடிஎம் அட்டையின் பின் நம்பரை கேட்டார். இதனை உண்மை என நம்பிய நான் ஏடிஎம் அட்டையின் எண்ணைத் தெரிவித்தேன். சற்று நேரத்தில் எனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.

இதில் எனது கணக்கிலிருந்து அடுத்தடுத்து பணம் பறிபோனது. மொத்தம் ரூ. 23 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ள தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த நான் நேராக சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்று விவரம் கேட்டதற்கு, அதுபோன்று வங்கியில் இருந்து யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என விளக்கம் அளித்தனர். மேலும் இது போன்ற அழைப்புகளைத் தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்' என்றார்.

 

 

 

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது பாருக் அவர்கள் நம்மிடம் கூறுகையில்...
'இதுபோன்ற நூதன முறையில் பண மோசடி செய்யும் சம்பவம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடக்கிறது. அதிரை சுற்று வட்டார பொதுமக்கள் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் இதுபோன்ற மோசடி அழைப்புகளை தவிர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து அழைப்பு வரும் பட்சத்தில் அருகில் உள்ள காவல்துறையின் உதவியை நாடலாம். அல்லது ஏடிஎம் அட்டையின் பின்புறமுள்ள அவசர அழைப்பு எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

செல்போனில் தொடர்பு கொள்ளும் அறிமுக மில்லாத நபர்களிடம் நம்மை பற்றிய விவரங்கள் அல்லது வங்கி கணக்கு குறித்த தகவல்கள் தெரிவிக்க வேண்டாம். இவை ஆபத்தை விளைவிக்கும். இதுபோன்ற நூதன மோசடிகளில் வாடிக்கையாளர்கள் ஏமாறுவதை தவிர்க்கும் பொருட்டு வங்கிகளின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ஒலிப்பெருக்கி அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும் பொதுமக்கள் பார்வையில் படும்படி சம்பந்தபட்ட வங்கிகளின் முன்புற பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு தட்டி வைக்க வேண்டும்.' என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.