மோடியும் , அமீத்ஷாவும் வெட்கித் தலை குனியுங்கள். குஜராத்தில் பள்ளி வாசலில் குவியும் இந்து பெண்கள்! - வீடியோகுஜராத் அஹமதாபாத்தில் உள்ளது தாரியாபூர் கிராமம். பல நாட்களாக கார்பரேஷன் தண்ணீர் திறந்து விடவில்லை. கிராம மக்கள் பெரிதும் சிரமபட்டனர். அங்குள்ள ஜூம்ஆ பள்ளியில் தண்ணீர் போர்வெல் மூலமாக எடுக்கப்பட்டு பயன் படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தண்ணீருக்கு அல்லாடுவதைக் கண்ட பள்ளி நிர்வாகம் பொது மக்கள் தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியது. அந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் இந்துக்களே! அனைவருக்கும் அழைப்பு விடுத்து பள்ளியில் அறிவிப்பு பலகையும் வைத்தனர்.

பள்ளிவாசலின் ட்ரஸ்டி அஜீஸ் காந்தி கூறுகிறார் 'போர்வெல் மூலமாக பள்ளிவாசல் தேவைகளுக்காக தண்ணீர் எடுக்கிறோம். பல இந்து குடும்பங்கள் தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைவதை பார்த்தோம்.. அந்த மக்களுக்கு உதவ தொழுகையில்லாத நேரங்களில் தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தோம். ஒரு நாளுக்கு 2000 பேருக்கு மேல் வந்து தண்ணீர் பிடித்து செல்கின்றனர். பள்ளியின் உள்ளே வந்து நீர் பிடிக்க நாங்களும் உதவிகளும் செய்கிறோம்.' என்கிறார்.

மற்றொரு நிர்வாகி ரஃபீக் நாக்ரி கூறுகிறார் 'தண்ணீர் எங்களிடம் அதிகம் உள்ளது. அதனை தேவையுடையோருக்கு தருகிறோம். மனிதனுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவையாகும் என்கிறது இஸ்லாம். அதனைத்தான் செய்கிறோம்' என்கிறார்.

மீனா என்ற இந்து பெண் கூறுகிறார் 'எனது குடும்பத்தில் நான்கு பேர். தண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம். முஸ்லிம்கள் எங்களுக்கு தண்ணீர் தடையின்றி தந்தனர். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை' என்கிறார்.

பன்முகம் கொண்ட இந்திய மக்களின் மனோபாவம் இதுதான்.

இஸ்லாமிய கர்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து அதன் சிசுவையும் தீயில் பொசுக்கி 3000 முஸ்லிம்கள் கொல்லப்பட காரணமாயிருந்த நரேந்திர மோடியும் , அமீத்ஷாவும் வெட்கித் தலை குனியுங்கள். எவ்வளவுதான் வலி இருந்தாலும் சிரமம் என்று இந்துக்கள் கூறும்போது ஓடி வருவது முஸ்லிம்கள்தான். அதனைத்தான் இஸ்லாமும் போதிக்கிறது.Share on Google Plus

1 comments:

  1. மோடியை, அமீத் ஷாவை ரொம்ப புகழாதீர்கள்,
    என்னமோ வெட்கம், மானம், நாணம், சூடு, சுரணை
    எல்லாம் இருப்பது போல!

    ReplyDelete

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.