தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி "தன்சில் அஹமத்" உத்தர பிரதேசத்தில் சுட்டுக்கொலை.



தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் உத்தர பிரதேசத்தில் சுட்டுக்கொல்லபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதயுள்ளது. தேசிய புலனாய்வுத்துறையில் பணியாற்றி வந்த அதிகாரி தன்சில் அஹமத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் தன்சில் அஹமதின் மனைவி படுகாயமுற்றுள்ளார். இந்த மொத்த நிகழ்வையும் அவரது இரண்டு குழந்தைகளும் காரின் பின் இருக்கையில் இருந்து பார்த்துள்ளனர். தன்சில் அஹமத் உடலில் 26 இடங்களில் குண்டு துளைத்துள்ளது.
தன்சிலின் மனைவி ஃபர்சானா விசாரணை அதிகாரிகளிடம் இது திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்று கூறியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்திர துப்பாக்கி மூலம் தங்களை நோக்கி சுட்டதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து விசாரணை அதிகாரி தெரிவிக்கையில் “அவர்கள் பதுங்கியிருந்து தாக்கிய விதம் மற்றும் அவர்கள் சுட்ட தோட்டாக்களின் எண்ணிக்கை இவை அனைத்தும் எக்காரணம் கொண்டும் தன்சில் உயிர் பிழைத்து விடக்கூடாது என்று தாக்கியதை உறுதி படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான தன்சில் மொரதாபாத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் என்று அறிவித்துள்ளனர்.

தன்சில் அஹமத் குறித்து தேசிய புலனாய்வுத்துறையின் ஆய்வாளர் சஞ்சீவ் குமார் கூறுகையில், தன்சில் மிகவும் அர்ப்பணிப்புள்ள மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரி என்று கூறியுள்ளார். அவர் எல்லை பாதுகாப்பு படையில் உதவி தளபதியாக பணியாற்றி வந்தவர். மேலும் பதான்கோட் தாக்குதல் தொடர்பான விசாரணையில் தன்சில் அஹமத் ஈடுபட்டு வந்தார் எனவும் இல்லை எனவும் இருவேறுபட்ட தகவல்கள் உலாவுகின்றது. பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு இந்தியா வருகையின் போது தன்சில் அஹமத் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவரின் கொலை குறித்து தேசிய பாதுகாப்பு படை, தீவிரவாத தடுப்பு படை மற்றும் உத்தர பிரதேச காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.