பீகார் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமல் - மதுபானங்கள் தயாரிக்கவும் தடை - நிதிஷ்குமார்பீகார் முழுவதும் மதுவிலக்கை அம்மாநிலத்தை ஆளும் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு அமல்படுத்தியுள்ளது. பிராந்தி, விஸ்கி, பீர் உள்ளிட்ட வெளிநாட்டு மதுபானங்கள் தயாரிக்கவும் பீகாரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத், நாகாலாந்து, மிசோரத்தை தொடர்ந்து நான்காவது மாநிலமாக தற்போது பீகாரிலும் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ராணுவ கேன்டீன்களில் மது விற்பனை தொடரும் என பீகார் அரசு அறிவித்துள்ளது. பீகாரில் முழு மதுவிலக்கை அமல்படுத்தியதன் மூலம் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

போலீஸ் உறுதிமொழி:


பீகார் அரசு மதுவிலக்கை அமல்படுத்தியதையடுத்து மது அருந்த மாட்டோம் என அம்மாநில காவல்துறையினர் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முன்னதாக மது அருந்த மாட்டோம் என ஏற்கனவே பீகார் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி அளித்துள்ளனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.