முத்துப்பேட்டையில் பெயிண்டர் நல சங்க கூட்டம்...மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது.. முத்துப்பேட்டை பெயிண்டர் நல சங்க கூட்டத்தில் தீர்மானம்!

 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பெயிண்டர் நல சங்க கூட்டம் புதிய பேருந்து நிலையத்தில் அவைத்தலைவர் நாடிமுத்து தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சிங்காரவேலு முன்னிலை வகித்தார். முன்னதாக தலைவர் ஏ.என்.ஆறுமுகம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வருகிற மே 1-ந்தேதி தொழிலாளர் தினத்தை நமது சங்கம் சாபில் தனியாக சிறப்பாக கொண்டாடுவது, முத்துப்பேட்டை அரசு மருத்துவ மனையில் குடிநீர் வசதி செய்து தர வேண்டும், நலவாரியம் மூலம் பெயிண்டர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை மற்றும் திருமண உதவி தொகை பெற்றுகொடுப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. கூட்டத்தில் செயலாளர் தனபால், துணைத்தலைவர்கள் ஜகபர்அலி, பசுபதி, துணைச்செயலாளர்கள் ரமேஷ், சுரேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஜலால், முருகேஷ், ஜெயராமன், அண்ணாத்துறை, முருகதாஸ், கோபு உட்பட பலரும் கலந்துக்கொண்டனர.; முடிவில் பொருளாளர் மோகன் நன்றி கூறினார.;
படம் செய்தி
முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடந்த பெயிண்டர் நல சங்கம் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டையை அவைத்தலைவர் நாடிமுத்து வழங்கினர். அருகில் தலைவர் ஏ.என்.ஆறுமுகம், துணைத்தலைவர் சிங்காரவேலு உட்பட பலரும் உள்ளனர்.

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை

Painter 02
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.