முத்துப்பேட்டையில் இரவோடு இரவாக அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பு - பரபரப்புமுத்துப்பேட்டை அருகே அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை தர்காவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2 வகுப்பறை கொண்ட ஒரு பழமையான வகுப்பறை கட்டிடம் இருந்தது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற பெற்றோர், பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியைடைந்தனர். ஏனெனில் அந்த பழமையான பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, முறையான பதில் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து உயர் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் விசாரித்ததில், இந்த வகுப்பறை கட்டிடத்தை அதிகாரிகள் துணையுடன் அப்பகுதியை சேர்ந்த ஒப்பந்தக்காரர் ஒருவர் பள்ளியின் பின்பக்க சுற்றுச்சுவரை இடித்துவிட்டு அவ்வழியாக இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரங்களை கொண்டு வகுப்பறை கட்டிடத்தை இடித்துள்ளனர். மேலும் வகுப்பறை கட்டிடம் இருந்த பின்பக்க சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் வீரமணி கூறுகையில், பள்ளி வளாகத்தில் இருந்த 2 வகுப்பறை கொண்ட பழமையான கட்டிடம் பழுதடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென வகுப்பறை கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பிறகு சிறிது நேரத்தில் யூனியன் ஆபிசில் சொன்னதாக கூறி யாரோ சிலர் வந்து கட்டிட கழிவுகளை வாகனத்தில் அள்ளி சென்றனர் என்றார். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், பள்ளி வகுப்பறை கட்டிடம் இடிப்பது குறித்து எந்த அனுமதியும் பெறவில்லை. இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சுப்பிரமணியன் கூறுகையில், இதுகுறித்து இதுவரை எந்தவித தகவலும் வரவில்லை என்றார். அப்பகுதி திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஜாம்பை கல்யாணம் கூறுகையில்: எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் அத்துமீறி ஒரு அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டால் யாரும் முறையான பதில் தரவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

Thanks To : Dinakaran
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.