இலங்கையில்…. பேய் பிடித்ததாக பெண்ணுக்கு தேங்காயினால் தலையில் அடி

பூஜை பரிகாரத்தின் போது எலுமிச்சைப் பழம் தொண்டையில் சிக்கியதில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

 

அனுராதபுரம் பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இதனை குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்ட அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியும் எஸ்.எம்.எச்.எம்.என்.சேனநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.

 

மேலும் இந்தப் பெண்ணின் உடலில் இருபதுக்கு மேற்பட்ட எரிகாயங்களும். அடிகாயங்களும் காணப்பட்டதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன் 36 வயதான குறித்த பெண்ணுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி மந்திரவாதியிடம் அழைத்துச் சென்ற வேளை குறித்த மந்திரவாதியினால் இந்தப்பெண்ணுக்கு எலுமிச்சம்பழம் ஒன்று விழுங்குவதற்கு வழங்கப்பட்டதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளைஇ குறித்த மந்திரவாதியால் தனது மனைவியின் வாயில் எலுமிச்சம்பழம் வைத்து திணிக்கப்பட்டதாகவும், தேங்காயினால் அவரது தலையில் அடித்ததோடு, தீப்பந்தத்தால் மனைவியின் உடலில் சூடு வைத்ததாகவும் அவரது கணவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த சம்பவத்தினை அடுத்து குறித்த மந்திரவாதியும்இ அவரது உதவியாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளர்.

 

மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.