ஆசிய ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்ற அதிரை வீரருக்கு பாராட்டு !தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி இவரது மகன் அப்துல் வாஹிது ( வயது 17 ). திருச்சியில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். ஜூடோ விளையாட்டில் அதிக ஆர்வமாக விளையாடி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்தோ - நேப்பால் ஊரக விளையாட்டு போட்டி, ஏப்ரல் 11ல், காட்மாண்டுவில் நடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். ஜூடோ போட்டியில் மாணவன் அப்துல் வாஹிது கலந்துகொண்டு விளையாடினார். போட்டியில் வெற்றி பெற்று ஆசியா ஜூடோ போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தமுமுக நிர்வாகிகள் ஆசிய ஜூடோ போட்டிக்கு விளையாட தகுதி பெற்ற மாணவன் அப்துல் வாஹிதை அதிரை அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலளார் அஹமது ஹாஜா, தமுமுக அதிரை பேரூர் பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி, துணைச்செயலாளர் கமாலுதீன், அமீரக ஷார்ஜா மண்டல பொறுப்பாளர் மன்சூர், சேக் நசுருதீன், நியாஸ் அஹமது, இப்ராஹிம்ஷா உள்ளிட்ட தமுமுகவினர் இருந்தனர்.

 

Adirai.jpg 02
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.