இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களின் சிறுநீரகம் அகற்றம் கோர்ட்டில் போலீஸ் அறிக்கைஇலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களின் சிறுநீரகம் அகற்றப்பட்டு உள்ளது என்று அந்நாட்டு போலீஸ் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.


இலங்கையில் சிலவாரங்களுக்கு முன்னதாக வீசா அனுமதியின்றி நாட்டில் தங்கியிருந்தாக 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். தெற்கு கொழும்புவின் வெள்ளவத்தை பெனிக்விக் வீதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட 8 பேர்களில் 6 பேரது சிறுநீரகம் அகற்றப்பட்டு உள்ளது. இலங்கையில் உடல் உறுப்புகள் கொள்ளையில் இந்தியர்களின் சிறுநிரகம் அகற்றப்பட்டு உள்ளது என்று கொழும்பு குற்றப்பிரிவு போலீசார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தெரிவித்து உள்ளனர்.


இலங்கையில் உடல் உறுப்புகள் கொள்ளை விவகாரத்தில் போலீசார் விசாரணையை விரிவுப்படுத்தி உள்ளனர். போலீசார் தரப்பில் அளிக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு அடுத்த விசாரணையை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.


இந்திய போலீசார் புகார் தெரிவித்ததை தொடர்ந்து நாங்கள் உள்ளூர் மருத்துவர்களில் விசாரணையை தொடங்கினோம் என்று இலங்கை சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. கடந்த ஜனவரியில் இலங்கையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் மோசடி நடப்பதாக இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 6 மருத்துவர்கள் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய போலீஸ் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது, இதனைத் தொடர்ந்து இலங்கை விசாரணையை தொடங்கியது.


இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.


வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளவும் இலங்கை தடை விதித்தது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.