சவூதியில் அரபியை வியக்க வைத்த தமிழர் அப்துர் ரஷீத்கழிவறையில் கண்டு எடுத்த இரண்டு லட்சம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த நம்பிக்கை நட்சத்திரமான அப்து ரஷீத்…..!!

சவூதி அரேபியா ஜித்தா விமான நிலையத்தில் துப்புறவு பணியாளராக பணிப்புரிபவர் இந்தியாவை சேர்ந்த அப்து ரஷீத்
குறைந்த ஊதியத்தில் அரபு நாட்டில் பணியாற்றக்கூடியவராக இருந்தாலும் நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் மறுப்பெயர் தான் முஸ்லிம் என்ற இலக்கணத்திற்கு சான்றாக மாறியுள்ளார்.

ஜித்தா விமான நிலையத்தின் கழிவறையில் அவர் கண்டெடுத்த சுமார் இரண்டு இலட்சம் இந்திய மதிப்பிலான சவுதி ரியால்களை விமான நிலைய நிர்வாகத்தில் ஒப்படைத்துள்ளார்.

அவர் ஒப்படைத்த சில மணி துளிகளில் பணத்தை இழந்தவர் விமான நிலைய அதிகாரியிடம் முறையிடவே உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்டபிறகு அந்த பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது

தனக்கு தேவைகள் அதிகம் என்றாலும் அடுத்தவன் சொத்துக்கு ஆசைபடாதவன் தான் முஸ்லிம் என்ற இலக்கணத்திற்கு சான்றாக திகழும் அப்து ரஷீத் பாராட்டுக்கு உரியவர்.

img_5247-1
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.