கணினியின் பாஸ்வேர்டை மறந்தால்...கணினிகளில் ரகசிய குறியீட்டு சொற்களான ‘பாஸ்வேர்டு’ கொடுத்து பணி செய்வது பாதுகாப்பானது. ஆனால் நமது பாஸ்வேர்டை மறக்க நேர்ந்தால் என்ன செய்வது? இதோ அதற்கான வழி...

கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் நிர்வகிக்கும்போது இந்த சிக்கலை தீர்ப்பது எளிது. அட்மின்  பாஸ்வேர்டையே மறந்தால், அதற்கு தீர்வு காண்பது சிக்கலான வழி முறையாகும். மாறாக துணை கணக்கு களின் பாஸ்வேர்டு மறந்துபோனால் கீழ்க்காணும் வழியைப் பின்பற்றலாம்...

விண்டோஸ் 7 இயங்குதளம் என்றால்   Ctrl + Del + Alt    என்ற விசைகளை ஒன்றாக அழுத்துவதன் மூலம் புதிய திரை திறக்கும். அதில் சுவிட்ச் யூசர் (Switch User) ஆப்சனை கிளிக் செய்யவும். விண்டோஸ் 8 இயங்குதளம் என்றால் யூசர் முகவரியின் இடது பக்கத்தில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யவும். இப்போது பாஸ்வேர்டு தெரிந்த மற்ற அட்மின் கணக்கு வழியாக உள்ளே நுழையவும். இப்போது அந்த கணக்கில் இருந்து மறந்துபோன யூசர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்ற முடியும். பின் புதிதாக பாஸ்வேர்டு கொடுத்துக் கொள்ளவும்.

அல்லது கண்ட்ரோல் பேனல் வழியாக    User Accounts and Family Safety / User Accounts  Add or remove user accounts. செல்லவும். இப்போது எந்த கணக்கின் பாஸ்வேர்டு மறந்ததோ, அந்த கணக்கை தேர்வு செய்யவும்.

உடனே பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளவும், கணக்கை நீக்கவும் ‘ஆப்சன்’ திறக்கும். பாஸ்வேர்டை மாற்றுவதென்றால் மாற்றிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் கணக்கையே நீக்கிவிட்டு புதிய கணக்கு தொடங்கிக் கொள்ளலாம்.

மற்றொரு வழியில் பாஸ்வேர்டு தவறு என்று சுட்டிக்காட்டும்போது அதில் தெரியும் ‘ரீசெட் பாஸ்வேர்டு’ ஆப்சனில் நுழையவும். இப்போது ‘நெக்ஸ்ட்’ கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும். அதில் புதிய பாஸ்வேர்டு கொடுத்து உறுதி செய்து கொண்டு வெளியேறவும்.

மூன்றாவது வழியில் மாற்று அட்மின் கணக்கின் வழியாக உள்ளே நுழைந்து ரன் கமாண்ட் பெட்டியில் வைத்து விண்டோஸ் பொத்தானையும்   +X   பொத்தானையும் அழுத்தவும். இப்போது திறக்கும் ஆப்சனில்   Command Prompt (Admin)   என்பதை கிளிக் செய்யவும். இதிலும் புதிய கணக்கின் பெயர் மற்றும் பாஸ்வேர்டை கொடுக்கலாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.