ஆலய கருவறைக்குள் செல்ல முயன்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்புமராட்டிய மாநிலத்தில் சனி பகவான் ஆலய கருவறைக்குள் செல்ல முயன்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அகமது நகரில் உள்ள சனி ஷிக்னாப்பூர் கோயில் வளாகத்தியே இந்த சம்பவம் நடந்தது. மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து கோயில் கருவறைக்குள் பூமாதா ரன் ராகினி படையை சேர்ந்த பெண்கள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

சனி ஷிக்னாப்பூர் கோயில் கருவறைக்குள் பெண்கள் நுழைவதற்கு தடை நிலவி வந்தது. நூற்றாண்டுகளாக நிலவி வந்த இந்த வழக்கத்தை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆலயத்தின் எந்த பகுதிக்கும் செல்ல உரிமை உள்ளது என வெள்ளிக்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.