உலகை உலுக்க வருகின்றதா பயங்கர பூகம்பம்? விபரம் உள்ளே…மியன்மார், ஜப்பான், ஈக்குவடோர் ஆகிய நாடுகளில் கடந்த மாதம் மற்றும் கடந்த வாரம் உலுக்கிய நில நடுக்கங்கள் உலகில் பயங்கர பூகம்பத்தை ஏற்படுத்தப் போகின்றதா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதற்கான முன் அறிவிப்புத்தான் இந்தப் பூகம்பங்கள் என்கின்றார்கள் புவியியல் ஆயவாளர்கள்.

 

மியன்மாரில் 6.9

 

கடந்த வருடம் நேபாளத்தை உலுக்கிய பயங்கர பூகம்பத்தை அடுத்து இந்த வருடம் மியன்மாரில் இம்மாதம் 13 ஆம் திகதி நில நடுக்கம் எற்ப்பட்டது.

 

இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத காட்டுப் பகுதி என்பதால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.

 

ஆனால் அதன் தாக்கம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் எதிரொலித்தது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இரு கட்டிடங்கள் இடிந்து 2 பேர் உயிர் இழந்தார்கள். 70 பேர் காயமடைந்தார்கள்.

 

ஜப்பானில் 6.5

 

மியன்மாரைத் தாக்கிய மறுநாளே ஜப்பானின் கியூசு தீவில் இம்மாதம் 14ஆம் திகதி இரவில் நிலநடுக்கம் தாக்கியது.

 

ரிக்டர் அளவில் 6.5ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் பல கட்டிடங்களைப் பதம் பார்த்தது. 9 பேர் பலியானார்கள்.

 

800 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தார்கள். அங்கு 200 க்கும் அதிகமான தடவைகள் நில நடுக்கம் ஏற்பட்டதால் பீதியில் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தார்கள்.

 

மீண்டும் ஜப்பானில் 7.3

 

கியூசு தீவில் நிலநடுக்கப் பீதி அகலாத நிலையில் இம்மாதம் 16ஆம் திகதி அதே கியூசு தீவில் குமமோட்டோ பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது.

 

அது ரிக்டர் அளவில் 7.3 என்று பதிவானது. அடுத்தடுத்து குமமோட்டோவில் இரண்டு நில நடுக்கம் ஏற்ப்பட்டு 40 பொது மக்கள் பலியானார்கள்.

 

பீதியில் உறைந்த மக்கள் 90 ஆயிரத்திற்கும் அதகமானோர்கள் கியூசு தீவை விட்டு வெளியேறினார்கள்.

 

தென் அமெரிக்காவில் 7.9

 

ஜப்பானில் தாண்டவமாடிய நிலநடுக்கம் 16ஆம் திகதி தென் அமெரிக்காவின் ஈக்குவடோர் தீவில் இரு தடவைகள் குலுக்கி எடுத்தது.

 

முதவாவது நடுக்கம் 4.8 ரிக்டராகவும் இரண்டாவது நடுக்கம் 7.9 ரிக்டராகவும் பதிவானது. இந்த நில நடுக்கத்தால் 100 க்கும் அதிகமான கட்டிடங்கள் பாலங்கள் இடிந்து நொறுங்கியது.

 

272 பொதுமக்கள் பலியானார்கள். இந்த நில நடுக்கங்கள் ஒரு வாரத்து நிகழ்வு என சாதாரணமாக புறந்தள்ளிவிட முடியாது என்கின்றார்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.

 

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே வழக்த்தற்கு மாறாக தெற்காசிய மண்டலத்தில் பூ கம்பங்கள் தொடர்ந்து வருகின்றன.

 

ஏப்ரல் 10ஆம் திகதி பாகிஸ்தானில் 6.6 ரிக்டர் அளவில் பதிவான நில நடுக்கத்தில் 6 பேரும் ஜனவரி 4 ஆம் திகதி இந்தியா மற்றும் பங்காளதேசில் 11 பேர் பலியானார்கள்.

 

இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனா மற்றும் நேபாளத்திலும் பூகம்பம் ஏற்பட்டுள்ளன. தெற்காசியா, ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தை இலக்கு வைத்து அடுத்தடுத்து 3 தினங்களில் ஏற்பட்டுள்ள நில நடுக்கத்தால் பல நூற்று மக்கள் பலியானதை அடுத்து புவித் தட்டுக்கள் பயங்கரமானதாக குலுங்குவதற்கான காரணத்தை தேடும் முயற்சியில் சர்வதேச புவியியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

 

அந்த ஆய்வு அறிக்கையில்,

 

அந்த ஆய்வில் இருந்து வெளியான முதல் கட்ட அறிக்கையில் பயங்கரமானதாக உள்ளது. மிகப் பயங்கரமான பூகம்பம் பூமியையப் பிளக்கப் போகின்றதற்கான அச்சாரமாக அறிகுறியாகவே இந்த மியன்மார், ஜப்பான், ஈக்குவடோர் நில நடுக்கங்கள் தாக்கி இருப்பதாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக் கழகத்தின் புவியியல் நிபுணர் ரோஜ்ஹன் வெல்கம் அபாய அறிவிப்புச் செய்துள்ளார்.

 

தற்போதைய சூழலை ஆராயும் போது 4 அபாயகரமான பூகம்பம் ஏற்படவுள்ளதாக கணித்துள்ள ரோஜ்ஹன் அவை எல்லாமே 8 ரிக்டர் அளவுக்கும் அதிகமாக இருக்கும் என்று கிலி கொள்ள வைத்துள்ளார்.

 

ரோஜ்ஹனின் கணிப்புக்கள் துல்லியமாக இருக்குமானால் உலக மக்களை உலுக்க காத்திருப்பதாக தெரிகிறது.

 

இதனால் ஏற்படக்கூடிய உயிர் இழப்புக்கள் லட்சத்தை அதிகரிக்கும் என்றும் புவியியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றார்கள்.

 

அந்த 8க்கும் அதிகமான ரிக்டர் அளவில் வரப் போகின்ற பூகம்பம் எந்தந்த நாடுகளைத் தாக்கும் என்பதை உத்தேசமாக கண்டறியும் முயற்சியில் புவியியில் ஆய்வாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

அது இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டில் வெளிவந்துள்ள ஹொலிவூட் திரைப்படம் சென்ட் அன்ரியா காட்சிகள் நிஜமாகி விடுமா என்று புவியியல் ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

 

2014ஆம் ஆண்டு சுனாமி பற்றிய திரைப்படம் வெளிவந்த பின்னர்தான் இலங்கைக்கும் சுனாமி வந்து அந்த திரைப்படத்தை நினைவூட்டியது.


 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.