முத்துப்பேட்டை அருகே காவல் நிலையம் முற்றுகைகட்சி நிர்வாகி மீது பொய் வழக்கு போட்டதை கண்டித்து, முத்துப்பேட்டை அருகே மக்கள் முன்னேற்ற கழகத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் வசிப்பவர் வினோத். தமிழக மக்கள் முன்னேற்றக்கழக (ஜான் பாண்டியன் கட்சி) ஒன்றிய செயலாளர். இவர் மீது எடையூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் 2 பொய் வழக்கு போட்டதாகவும், கடந்த 8ம் தேதி வீட்டிலிருந்த இவரது டூவீலரை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் கூறி நேற்று காலை தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் தங்க அய்யப்பன் தலைமையில் கட்சியினர் எடையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கட்சி நிர்வாகிகளிடம் இன்ஸ்பெக்டர் முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் காவல்துறை தரப்பில் பொய் வழக்கு குறித்து விசாரணை நடத்துவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட டூவீலரை திரும்ப ஒப்படைப்பதாகவும் உறுதி அளித்ததாக தெரிகிறது. இதனையடுத்து கட்சியினர் போராட்டத்தை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.