பெங்களூருவில் பெண்ணை கிண்டலடித்த ஐ.டி. நிறுவன ஊழியர்; மின்கம்பத்தில் கட்டி வைத்து அடி உதை...கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பெண்ணை பின் தொடர்ந்து சென்று ஆபாச வார்த்தைகளால் கிண்டிடலடித்த ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து கும்பல் ஒன்று அடித்து உதைத்துள்ளது.

சில தினங்களுக்கு முன் அலுவலகத்திற்கு செல்லும் வழியில் அந்நபர் தன்னை பின் தொடர்ந்து வந்து ஆபாச வார்த்தைகள் கூறி கிண்டல் செய்தது குறித்து தன் கணவரிடம் கூறியுள்ளார் 25 வயது நிறைந்த அந்த பெண்.  இதனை தொடர்ந்து அந்த நபரை பெண்ணின் கணவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்றும் இந்த கிண்டல் தொடர்ந்ததை அடுத்து தனது கணவரிடம் தகவல் தெரிவித்துள்ளார் அந்த பெண்.  உடனே சம்பவ இடத்திற்கு தனது நண்பர்களுடன் வந்த பெண்ணின் கணவர் மற்றும் அப்பகுதியில் உள்ள சிலர் சேர்ந்து அந்த நபரை பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர்.  இதனை வீடியோவாகவும் படம் பிடித்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு உடனே சென்று குற்றவாளியை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.  தன்னை கிண்டலடித்த நபருக்கு எதிராக அந்த பெண் போலீசில் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.  சட்டத்தை தங்களது கைகளில் எடுத்து கொண்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராக ஐ.டி. ஊழியரும் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற செயலில் இனி ஈடுபட கூடாது என அந்நபரை போலீசார் கடும் எச்சரிக்கை செய்து பின் விடுவித்தனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.