சராசரி இந்திய குடிமகனின் ஜன நாயக சொற்ப அதிகாரம்சராசரி இந்திய குடிமகன் தன் வாழ்நாளில் 16 நாட்களில் மட்டும் அதிகாரம் உள்ளவனாக அறியப்படுகிறான் தன்னை ஆளும் மத்திய மாநில அரசுகளால். ஆனால் அரசு அதிகார வர்க்கங்களோ தன் வாழ்நாட்களில் பெரும்பான்மையான காலத்தில் அதிகார வாழ்வில் வாழ்ந்து அனுபவிக்கின்றனர். என்ன ஒன்னும் புரியவில்லையா..? தொடர்ந்து படியுங்கள் புரியும்....அதாவது சராசரி குடிமகனின் ஆயுள் காலம் 60 வயது என்று எடுத்துக்கொண்டால் தனது 18 வது வயதில் வாக்களிக்கும் உரிமையை பெறுகிறான். மீதமுள்ள 42 ஆண்டுகளில் 8 தடவை மாநில அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் ஓட்டு போடுகிறான் மற்றும் 8 தடவை மத்திய அரசை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் வாக்கு அளிக்கிறான். ஆக மொத்தம் 16 நாட்கள் மட்டுமே தன் வாழ்நாளில் அதிகாரம் பெறுகிறான்...மீதமுள்ள  15314 நாட்கள் (42 ஆண்டுகளை 365 நாட்களால் பெருக்கி வரும் நாட்களோடு 16 நாட்களை கழித்து வரும் தினங்களின் எண்ணிக்கை)  ஒட்டு பெற்றவர்களால் அதிகாரப்படுத்தப் படுகிறான். என்ன செய்வது. அது போகட்டும். ஆகவே மிக சொற்ப அதிகார நாட்களில் (16 நாட்களில்) ஒரு நாளை கூட நாம் தவற விட வேண்டாம். மறக்காமல் மே 16 ஆம் தேதி மாநில அரசை தேர்ந்தெடுக்கும் நமது அதிகாரத்தை பயன்படுத்துவோம் ...வாக்களிக்க வருவோம் மறவாமல்.

Thanks To   (வாவன்னா) எஸ். முஹமது இப்ராஹிம், அதிரை.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.