பிராய்லர் கோழிகளாக மாறி வரும் பள்ளி மாணவர்கள்மாணவர்களை படிக்க வைக்கும் முறை பிராய்லர் கோழிகள் வளர்ப்பதுபோல் உள்ளன!

 
பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்க வேண்டிய பாடங்களை பதினொன்றாம் வகுப்பில் மாணவர்களை படிக்கவைப்பதை பார்க்கும் பொழுது பண்ணைகளில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் தான் நினைவிற்கு வருகின்றன. ஆம், பிராய்லர் கோழிகள் முழுவதும் இறைச்சிக்காக வேண்டி இயற்கைக்கு மாறாக வெறும் நாற்பது நாட்களில் இரசாயண பொருட்களை கொடுத்து வளர்க்கப்படுகின்றது.


அதுபோல் தான் மாணவர்களையும் வெறும் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்க வேண்டிய பாடங்களை பதினொன்றாம் வகுப்பிலேயே படிக்க வைத்துவிடுகின்றனர். இதனால் மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பில் படிக்க வேண்டிய பாடங்களை முறையாக படிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதை நிலைமை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் உண்டு அவர்களை முன்கூட்டியே பத்தாம்வகுப்பு பாட திட்டங்களை படிக்கவைத்து விடுகின்றனர்.இவைகள் அனைத்தும் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் அதிகளவில் நடைபெறும் வாடிக்கையான ஒன்று ஏனெனில் பெற்றோர்களை வெறும் மதிப்பெண்களை பற்றி மட்டுமே ஆசைவார்த்தை கூறி அவர்களிடம் கல்விக்கட்டண கொள்ளையில் ஈடுப்படுகின்றனர். ஆனால் இதில் இருக்கும் பாதகங்களை பற்றி சிந்திக்கவிடுவது இல்லை.


இதில் என்ன தவறு என எதிர்கேள்வி எழலாம் ஆனால் இது மாணவர்களின் அறிவு திறன் மற்றும் சிந்திக்கும் ஆற்றலை மலுங்க வைத்துவிட கூடும். வயதிற்கு ஏற்ற அறிவு மட்டுமே சிறந்த மனிதவளமிக்க மனிதனை உருவாக்க முடிவும். இவ்வாறான எல்லையை மாணவர்கள் மீறும் சமயத்தில் வாழ்க்கையின் சுவாரசியத்தை இழக்க நேர்கிறது.


ஆக்கம்:  சாலிஹ்

Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.