முத்துப்பேட்டையில், திமுக வேட்பாளரை ஆதரித்து முனைவர் சுல்தானா பர்வின் பிரசாரம்முத்துப்பேட்டையில் திருத்துறைப்பூண்டி  திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைமைக் கழக பேச்சாளர் முனைவர் சுல்தானா பர்வின் பிரசாரம் செய்தார். முத்துப்பேட்டை ஆசாத் நகரில் திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக வேட்பாளர் ப.ஆடலரசனை ஆதரித்து தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் இரா.மனோகரன் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் ஜெகபர் அலி, முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் முகைதீன் அடுமை முன்னிலை வகித்தனர்.

திமுக மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் வரவேற்றார். கூட்டத்தில் வேட்பாளர் ஆடலரசனை ஆதரித்து தலைமை கழகப் பேச்சாளர் சுல்தானா பர்வின் பேசினார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, நகர பொருளாளர் பாலு, பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜெகபருல்லா, அய்யப்பன், மாவட்ட பிரதிநிதிகள் மஹாராஜா தமீம், இபுராஹிம், ஒன்றிய துணைச் செயலாளர் முத்துலெட்சுமி சிவா, காங்கிரஸ் மாநில சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஹாஜா, நகர காங்கிரஸ் துணைத் தலைவர்கள் குலாம் ரசூல், வேல் முருகன், நகர காங்கிரஸ் செயலாளர் நாசர், மீனவர் அணி தலைவர் நிஜாம், தி.மு.க வார்டு செயலாளர்கள் செல்வம், அன்பன், ரபி அகமது, அமானுல்லா, இராஜாராம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா.பிரபாகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் கடைத் தெருவிலும் தலைமை கழகப் பேச்சாளர் சுல்தானா பர்வின் பேசினார்.

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள  பள்ளங்கோயில் கடைத்தெருவில் ஆடலரசனுக்கு சுல்தானா பர்வின்  வாக்கு சேகரித்தார். இதில் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு  உறுப்பினர்கள் செல்வ ஜெயதேவன், அன்பரசு, ஒன்றிய துணை செயலாளர்கள் சேது  முருகானந்தம், ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் பாஸ்கர், ரவிச்சந்திரன்,  சார்பு அணி நிர்வாகிகள் பிரபாகரன், ஜாகீர் உசேன், புட்பநாதன்,  வினோத்குமார், ஊராட்சி செயலாளர் ராஜா, ஊராட்சி தலைவர் பாஸ்கர், முன்னாள்  தலைவர் காமராஜ், சோமு தியாகராஜன் மற்றும் ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.