உங்கள் கழுத்தில் கத்தியை வைக்கிறேன்: ஓவைசிக்கு ராஜ்தாக்ரே சவால்!!!பாரத் மாதா கி ஜெ என்ற கோஷம் தொடர்பாக நாட்டில் சலசலப்பு நீடித்து வரும் நிலையில், அண்மையில், எப்போதும் சர்ச்சை கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துபவர்களில் ஒருவரான அசாதுதின் ஓவைசி, என் கழுத்தில் கத்தி வைத்தாலும் பாரத் மாதா கீ ஜெ என்ற கோஷத்தை உச்சரிக்க மாட்டேன் என கூறியிருந்தார்.


இந்த நிலையில், நேற்று இரவு மும்பையில், நடந்த பொதுக்கூட்ட பேரணி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா (எம்.என்.எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்ரே பேசுகையில் ஓவைசியை கடுமையாக விமர்சித்தார். ராஜ்தாக்ரே கூறுகையில் “ மகாராஷ்டிரா வாருங்கள், உங்கள் கழுத்தில் நான் கத்தி வைக்கிறேன்” என்றார்.


மேலும்,  பிரதம் மோடி நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக சாடிய ராஜ் தாக்ரே,  உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சிக்கு உரிய மரியாதையை பாஜக கூட்டணி அளிக்கவில்லை  எனவும், எனவே கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்ரே வெளியேற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.