இந்தியா இந்துக்களுக்கு மட்டுமானதா: பாம்பே உயர்நீதிமன்ற நாக்பூர் பென்ச் கேள்விகடந்த செவ்வாய் கிழமை பாம்பே உயர்நீதிமன்ற நாக்பூர் பென்ச் பா.ஜ.க ஆளும் நாக்பூர் நகராட்சியிடம் “இந்தியா இந்துக்களுக்கு மட்டுமானதா” என்று கேள்வி எழுப்பியுள்ளது. ஜனார்த்தன் மூன் என்பவரால் தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின் போது இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

நாக்பூர் நகராட்சி மற்றும் ராம் மந்திர் டிரஸ்ட் இணைந்து நடத்திய ஏய்ட்ஸ் விழிப்புணர்வு முகாமில் ஹனுமான் பக்தி பாடல்களை பாடியதற்கு எதிராக இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி புஷன் கவாய் மற்றும் சப்னா ஜோஷி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் “ஏன் ஹனுமான் பக்தி பாடல்களை மட்டும் பாட வேண்டும் , குரானில் இருந்தோ பைபிளில் இருந்தோ அல்லது வேறு புனித நூலகளில் உள்ள விஷயங்களையோ ஏன் அங்கு வாசிக்க வில்லை” என்று கேள்வி எழுபியுள்ளார். மேலும் ஏய்ட்ஸ்ஸுக்கும் ஹனுமான் பக்தி பாடல்களுக்கும் என்ன தொடர்பு என்று கேட்ட அவர்கள் அந்த கொடிய நோயை குணப்படுத்தும் ஒரே வலி ஹனுமான் பாடலை பாடுவது தானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இன்னும்  இந்தியா இந்துக்களுக்கு மட்டுமானதா என்றும் நாக்பூர் நகராட்சியிடம் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து நாக்பூர் நகராட்சி ஏய்ட்ஸ் விழிப்புணர்வையும் ஹனுமான் பாடல்களையும் இனி ஒன்றாக நடத்துவதில்லை என்று உறுதியளித்தபின் இந்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.