முத்துப்பேட்டையில் மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்களுடன் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு கொண்டாட்டம்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டார வளமையம் மற்றும் அனைவருக்கு கல்வி இயக்கம் சார்பில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பா.கருணாமூர்த்தி தலைமை வகித்து வகுப்பறையில் சக மாணவர்கள் போல் மூளை வளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பற்றி பேசினார். மேலும் அக்குழந்தைகளின் நடவடிக்கையைக் கண்காணித்து பெற்றோர்கள் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பதைப் பற்றி பெற்றோரிடம் விளக்கப்பட்டது. மேலும் அக்குழந்தைகளின் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மூளை வளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறம் கொண்ட மாணவர்கள் பங்குபெற்றனர். நிகழ்;ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொறுப்பு) ஆரோக்கிய அந்தோனி ராஜ், ஜே.ஆர்.சி.பொருப்பாளர் செல்வ சிதம்பரம் மற்றும் ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நன்றிக் கூறினார்.


படம் செய்தி:
முத்துப்பேட்டை வட்டார வளமையம் மற்றும் அனைவருக்கு கல்வி இயக்கம் சார்பில் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்த உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கொண்டாட்டத்தில் மூளை வளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறம் கொண்ட மாணவர்களுடன் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள்.


MPT

 

மு.முகைதீன்பிச்சை
முத்துப்பேட்டை
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.