யான்கீ லீவின் ஐ.நா. அறிக்கையும் பர்மாவில் அசின் விராத் பௌத்த வெறியும் !2012 ஆம் ஆண்டில் பர்மாவில் முஸ்லிம்களுக்கெதிராக மிகப்பெரிய அளவில் இனப்படுகொலைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது அது குறித்து தகவல் சேகரிக்க ஐ.நா.சபையால் தென்கொரியாவைச் சேர்ந்த யான்கீ லீ (Yanghee Lee) என்ற பெண்மணி அனுப்பி வைக்கப்பட்டார். அவர் பர்மா முஸ்லிம்களின் நிலை குறித்து கீழ்வரும் தகவல்களைக் கூறியுள்ளார்:

* பர்மா முஸ்லிம்களுக்கு எதிராக பர்மா அரசு உருவாக்கியிருக்கும் சட்டங்கள் அனைத்தும் கொடூரமானவை.*ரோகிங்யா முஸ்லிம்களில் சுமார் 1 லட்சம் மக்கள் அகதிகள் முகாமில் நோயாலும் சத்துக் குறைபாடுகளாலும் மிகவும் கவலைக்கிடமாக வதைபடுகிறார்கள். *

ரோகிங்யா முஸ்லிம்களுக்கு குடியுரிமை இல்லை. அவர்களுக்கு வெள்ளை அட்டை (white card) அடையாள அட்டையாக வழங்கப்படுகிறது.

இந்த அட்டையைஅவ்வப்போது ஒப்படைத்து விடக் கட்டளையிடுகிறது பர்மா அரசு.அவ்வாறு ஒப்படைத்து விட்டவர்களால் வேறு ஊருக்கு பயணிக்க முடியாது, தொழில் நடத்த முடியாது, பள்ளிக்கூடம் செல்ல முடியாது.

மருத்துவம் செய்து கொள்ள முடியாது.* 1823 ஆம் ஆண்டுக்குமுன் தங்கள் முன்னோர்கள் பர்மாவில் இருந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வில்லையென்றால் குடியுரிமை கிடையாது.

(நம்மிடம் 8 தலைமுறைக்கு முன்னால் ஆவணம் கேட்டால் என்ன செய்ய முடியும் ?)* முஸ்லிம் மக்கள்தொகை பெருகுவதை தடுக்க கருத்தடைச் சட்டம்.* ஒரு முஸ்லிம் பெண் 3 ஆண்டுக்கு ஒரு முறைதான் பிள்ளை பெற வேண்டும்.

முஸ்லிம்கடைகளில் யாரும் வரவு செலவு வைத்துக் கொள்ளக் கூடாது. புதிய கடைகள் திறக்க முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை. முஸ்லிம் கடைகளுக்கு அரசாங்க ஆதரவு கிடையாது.

முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை இல்லை, குடிமக்களுக்கு வழங்கப்படும் எந்தச் சலுகையும் முஸ்லிம்களுக்கு இல்லை. அகதிகள் நிலை தான்.

ஐ. நா. சபையால் அனுப்பி வைக்கப்பட்ட ‘யான்கீ லீ’ என்பவரின் அறிக்கையில் மேற்கண்ட செய்திகள் இடம் பெற்றதைக் கண்டு பர்மா அரசு கூட பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. ஆனால் ’பர்மாவின் பின் லேடன்’ என்று தன்னை அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுவதாகக் கூறும் ’அசின் விராத்’ பொங்கி எழுந்தார்.

“ Ms Lee she should have sex with Muslim Rohingya minority if she liked them so much” .“Don’t assume you are a respectable person, just because you have a position in the UN,” he said. “In our country, you are
just a whore.” என்று மிகவும் கடுமையான வாசகங்களால் விமர்சித்தார்.
இவரின் இந்த கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்து டைம் ஆங்கில இதழ் இவரைப்பற்றி ஒரு முகப்புக் கட்டுரையை வெளியிட்டிருந்தது.

அதில் இந்த நபரைப் பற்றியும் இவரது 969 என்ற இயக்கம் மற்றும் அதன் கொடிய திட்டங்கள், அதன் பின்னணி நோக்கம் ஆகியவை பற்றி எழுதி இருந்தது.

அதனைத் தொடர்ந்து பர்மாவின் பிரதமர் தென் சேன் தலையிட்டு, "டைம் இதழ் ஊடக தர்மத்தை இழந்து ஒருதலை பட்சமாக உள்ளது, அசின் விராத் எங்களின் பாதுகாவலர், புனிதமானவர், எங்கள் அரசாங்கத்தை வழிநடத்தும் வழிகாட்டி, அவரை விமர்சிக்க டைம் இதழுக்கு தகுதியில்லை" எனப் பேட்டியளித்தார்,

இதன் மூலம் அசின் விராத்தும் அவரது இயக்கமும் அரசாங்க ஆதரவுடன்தான் முஸ்லிம்களைக் கருவறுக்கிறார்கள் என்ற உண்மை பச்சையாக அம்பலமானது

.அசின் விராத் என்ற இந்த நபர் 14 ஆம் வயதில் பள்ளிப் படிப்பைத் துறந்து புத்த துறவியானார். சிறு வயதில் இருந்தே முஸ்லிம் வெறுப்பைக் கொண்டிருந்தார்.

2001 ஆம் ஆண்டு 969 என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். 2003 ஆம் ஆண்டு தீவிரவாத செயல்களுக்காக 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் 8 ஆண்டுகளில் 2010 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

2011 ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக மிக இழிவான வார்த்தைகளைப் பிரயோகித்து பிரச்சாரம் செய்து வருவதுடன் அவரது இயக்கத்தினருக்கு ஆயுதப்பயிற்சியும் அளித்து வருகிறார்.

இவை எல்லாமே பிரதமர் தென் சேன் னின் ஆதரவு மற்றும் உதவியுடன்தான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-அபூஷேக் முஹம்மத்

 

Burma-Muslims-2 Burma
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.