உடல் சூட்டைக் குறைக்க சாப்பிட வேண்டிய உணவுகள்!கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் கொடூரமாக உள்ளது. ஒவ்வொருவரும் கோடையின் வெயிலால் மிகுந்த அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உடல் வறட்சியால் ஒரு பக்க மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, மறுபக்கம் உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உடல் வெப்பத்தை தணிக்கும் பானங்கள்!!!

மேலும் பல காரணங்களால் கோடையில் இரவில் பலரும் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால், உடலைக் குளிர்ச்சிப்படுத்தும் மற்றும் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்வது தான்.

உங்களுக்கு சூடு பிடிச்சுருக்கா? அதை சரிசெய்ய சில எளிய வழிகள்!!!

அதுவும் இரவில் படுக்கும் முன் ஒருசில உணவுகளை கோடைக்காலத்தில் உட்கொண்டு வந்தால், உடல் சூடு தணிவதோடு, உடல் வறட்சியும் தடுக்கப்படும். இங்கு அப்படி கோடை இரவில் படுக்கும் முன் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தினமும் உட்கொண்டு உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுகள்!!!

 

சுரைக்காய்

 

Suraikkai

 

 

கோடையில் உடல் சூட்டைத் தணிக்க உதவும் காய்கறிகளில் ஒன்று சுரைக்காய். இந்த சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை இரவில் படுக்கும் முன் உட்கொண்டால், உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் உடல் சூடும் குறையும். அதுமட்டுமின்றி, இந்த காய்கறியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை

 

 

 

வெள்ளரிக்காய்

 

Vellarikkai

 

 

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதுவரை இருக்கும் உணவுப் பொருட்களிலேயே வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளது. ஆகவே இதனை கோடையில் அதிகம் உட்கொண்டு வந்தால், செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும். குறிப்பா இரவில் படுக்கும் முன் இதனை உட்கொண்டால், உடல் வெப்பம் தணியும்.

 

 

 

பரங்கிக்காய்

Parangkikkai

 

 

பரங்கிக்காயில் பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது. இதனை கோடையில் உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் உடல் வெப்பமும் குறையும்.

 

 

 

 

பீர்க்கங்காய்

 

Peerkankai

 

 

பீர்க்கங்காய் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் இதிலும் நீர்ச்சத்து உள்ளதால், இதனை இரவில் உட்கொண்டு வர, செரிமான கோளாறுகள் மற்றும் உடல் சூடு போன்றவற்றில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.

 

 

 

 

உருளைக்கிழங்கு

 

Urulai

 

உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், இது உடல் சூடு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி, இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.

 

 

 

 

 

தயிர்

 

Thaier

 

 

தயிரில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கால்சியம் ஏராளமான அளவில் உள்ளது. தயிரை இரவில் உட்கொள்வதன் மூலம், நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும். மேலும் உடல் வெப்பத்தைக் குறைக்கவும் உதவுவதால், அன்றாடம் கோடையில் தயிரை உட்கொள்ளுங்கள்.

 

 

 

 

தண்ணீர்

 

Thanneer

 

முக்கியமாக கோடையில் மற்ற காலங்களில் குடிக்கும் நீரின் அளவை விட அதிகமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.