போலி என்கெளவுன்டர் புகழ் "காவல்துறை அதிகாரி வன்சாரா" வீடு திரும்பினார்இஷ்ரத் ஜஹான் மற்றும் சொராபுதீன் ஷேக் ஆகியோரின் போலி என்கெளவுன்டர் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு குஜராத் செல்லக்கூடாது என்ற நிபந்தனையோடு பிணையில் விடுவிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி டி.ஜி.வன்சாரா தற்பொழுது குஜராத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இவரது வருகை விமர்ச்சையாக கொண்டாடபட்டது.

கொண்டாட்டங்களின் போது ஒரு கையில் வாளேந்தி “விகாஸ் ஜனந்தொலன்” என்று முழக்கிமிட்டார். என்கெளவுன்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்படும் அவர் தான் என்கெளவுன்டர் என்ற பெயரில் செய்த படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையில் என்கெளவுன்டர்கள் இல்லை என்றால் குஜராத் மற்றுமொரு காஷ்மீர் ஆகியிருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் நாம் ஃபீல்டிங் செய்தது போதும், இது நாம் பேட்டிங் செய்வதற்கான நேரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்னும் கூறிய அவர் இன்றிலிருந்து குஜராத் பிரச்சனைகள் தனது பிரச்சனைகள் என்றும் தற்போது நிலவும் சூழ்நிலைகள் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதில்லை என்றும் தான் அரசியலில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

போலி என்கெளவுன்டர் வழக்குகளில் பிணையில் விடுதலையான எட்டு குஜராத் காவல்துறை அதிகாரிகளில் வன்சாரா கடைசியானவர். மேலும் இந்த அரசு தேசியவாத அரசு என்றும் தேசியவாத சிந்தனைகளில் இது எந்த சமரசமும் செய்துகொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.