ஜீன்ஸ் மற்றும் இறுக்கி பிடிக்கும் ஆடைகளை அணியும் குடும்பத்தினரை புறக்கணிக்க உத்தர பிரதேச கிராம பஞ்சாயத்தில் முடிவுஉத்தர பிரதேசத்தில் கிராமம் ஒன்றில் ஜீன்ஸ் மற்றும் இறுக்கி பிடிக்கும் ஆடைகளை அணியும் பெண்களின் குடும்பத்தினரை புறக்கணிக்க கிராம பஞ்சாயத்து முடிவு செய்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள பாவ்லி கிராமத்தில் பஞ்சாயத்து ஒன்று கூடியது.  அதில், இளம்பெண்கள் ஜீன்ஸ் மற்றும் இறுக்கி பிடிக்கும் ஆடைகளை அணிய கூடாது என முடிவு செய்யப்பட்டது.

அப்படி உடைகளை அணியும் இளம்பெண்களின் குடும்பத்தினரை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனை கிராம பஞ்சாயத்து தலைவியின் கணவர் ஓம்வீர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.  இந்த பஞ்சாயத்தில், வரதட்சணை வாங்க கூடாது என மக்கள் உறுதி எடுத்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டது.

திருமணங்களின்போது, இசை கச்சேரி நடத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  பெண் சிசு கருக்கலைப்பிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இந்த முடிவுகளுக்கு கட்டுப்படாத எந்தவொரு குடும்பத்தினரையும் புறக்கணிப்பது என பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

இந்த பஞ்சாயத்தில், மரணத்திற்கு பின்னர் தெரிவிக்கும் இரங்கல் நிகழ்ச்சியின் இறுதி நாளை அடையாளப்படுத்தும் வகையிலான தெர்ஹ்வில் என்ற நிகழ்ச்சியில் ஒருவரும் கலந்து கொள்ள கூடாது என்றும் அங்கு உணவு உண்ண கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.