சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி எளிதாக செய்யலாம்.



மஞ்சூரியன் என்பது சீன வகை உணவு. சைவம், அசைவத்திலும் மஞ்சூரியன் செய்யலாம். வீட்டிலேயே எளிதாக சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

தேவையான பொருட்கள் :

எலும்பு நீக்கிய கோழிக்கறி - 400 கிராம்
முட்டை - ஒன்று
கார்ன் ப்ளவர் - 6 மேசைக்கரண்டி
மைதா - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
இஞ்சி விழுது - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்
குடை மிளகாய் - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
வெங்காயத்தாள் - சிறிதளவு
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி
வினிகர் - 2 மேசைக்கரண்டி

செய்முறை :

* கோழிக்கறியை கழுவி சுத்தம் செய்து விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

* அகலமான பாத்திரத்தில் 5 மேசைக்கரண்டி கார்ன்ப்ளவர், ஒரு மேசைக்கரண்டி மைதா, சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து சிக்கனை சேர்ந்து மறுபடியும் நன்கு கலந்து அரை மணி நேரம் ஊறவிடவேண்டும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு பாதியளவு வேகும்படி பொரித்து எடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும்.

* ப.மிளகாய், வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்.

* குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

* வெங்காயத் தாளை நீளவாக்கில் குறுக்காக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

* மீதமுள்ள கார்ன் ப்ளவரை முக்கால் கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும்.

* வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது போட்டு இலேசாக வதக்கிய பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

* அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும்.

* பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன் ப்ளவர் கலவையை ஊற்றிக் குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

* அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும்.

* பின்னர் நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.

* இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம்.

* சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.