'சட்டம் இல்லாவிட்டால்... 'பாரத் மாதா கீ ஜே'யை எதிர்ப்பாளர்களின் தலைகள் உருண்டிருக்கும்!'சட்டம் இல்லாவிட்டால், பாரத் மாதா கீ ஜே கோஷத்தை எதிர்ப்பவர்களின் தலைகளை வெட்டுவதற்கான வல்லமை நம்மிடம் உள்ளது என்று ஆவேசமாக யோகக் கலை குரு பாபா ராம்தேவ் கூறி உள்ளார்.


ஹரியாணா மாநிலம், ரோத்தக் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நல்லிணக்க மாநாட்டில் யோக குரு பாபா ராம்தேவ் கலந்து கொண்டு பேசும்போது, ''பாரத் மாதா கீ ஜே என கோஷமிடுவது நாடு மற்றும் தாய்மண்ணின் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் செயலாகும். இது மதம் சார்ந்ததல்ல. எந்த மதமாவது அந்த கோஷத்தை எழுப்புவதற்குத் தடை விதித்தால் அது தேச நலனுக்கு எதிரானது.

அந்த கோஷத்தை எழுப்புவதால் ஒரு குறிப்பிட்ட மதத்தை நாம் பின்பற்றுகிறோம் என்று அர்த்தம் அல்ல. அது தேசத்தின் கெளரவம், பெருமிதம் தொடர்பான விஷயம். நாம் பிறப்பால் ஹிந்துக்களாகவோ, முஸ்லிம்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ, சீக்கியர்களாகவோ இருக்கலாம்; ஆனால் முதலில் நாம் இந்தியர்கள் என்பதை மறந்து விடக்கூடாது

'என் கழுத்தில் கத்தியை வைத்து பாரத் மாதா கீ ஜே என கோஷமிடுமாறு கூறினாலும் நான் அந்த கோஷத்தை எழுப்ப மாட்டேன்' என்று தலையில் தொப்பி அணிந்த ஒருவர் (அசாதுதீன் ஒவைஸி) சமீபத்தில் கூறியிருந்தார். நாட்டில் சட்டத்தின் ஆட்சி உள்ளது. இல்லாவிட்டால், பாரத் மாதா கீ ஜே கோஷத்தை எதிர்ப்பவர் யாராயினும், ஒன்றல்ல, ஆயிரமல்ல, லட்சம் தலைகளை வெட்டுவதற்கான வல்லமை நம்மிடம் உள்ளது" என்றார் ஆவேசமாக.

பாபா ராம்தேவின் இந்த கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.