முத்துப்பேட்டை பகுதியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறந்தால் காவல்துறைக்கு தகவல் தர வேண்டும்முத்துப்பேட்டை பகுதியில் ஆளில்லா குட்டி விமானங்கள் பறந்தால் காவல்துறைக்கு தகவல் தர வேண்டுமென பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.முத்துப்பேட்டை காவல்துறை சார்பில் பழைய பேருந்து நிலையம், மண்ணை சாலை, குமரன் பஜார், ஆட்டோ ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை இன்ஸ்பெக்டா;(பொறுப்பு) ஜோதிமுத்து ராமலிங்கம் தலைமையில் போலீசார் வழங்கினர்.

இதில் ஆளில்லா குட்டி விமானங்கள் விண்ணில் பறக்க அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. விண்ணில் பறந்தாலோ, கீழே விழுந்து கிடந்தாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் சந்தேக நபர்கள், தெரிந்த நபர்கள் யாரேனும் குட்டி விமானங்களை இயக்குவது தெரிந்தாலும், அதன் மூலம் படம் எடுத்தாலும், திருவிழா மற்றும் இதர பணிகளுக்கு பயன்படுத்தினாலும் காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து தகவல் தெரிவிக்க 155226 என்ற இலவச தொலைப்பேசி எண்ணுக்கோ அல்லது அப்பகுதி காவல் நிலையத்துக்கோ பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டுமென துண்டு பிரசுரத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.