பாரத் மாதா கி ஜெய் என்று கூற மறுப்பவர்களின் தாடையை உடையுங்கள்: சத்தீஸ்கர் அமைச்சர்பாரத் மாதா கி ஜெய் என்று கூற மறுப்பவர்களின் தாடையை உடையுங்கள் என சத்தீஸ்கர் அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால் தெரிவித்துள்ளார். பாரத் மாதா கி ஜெய் பற்றிய சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சத்தீஸ்கர் மாநில அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வால். பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் பாரத் மாதா கி ஜெய் பற்றி பேசியுள்ளார். கூட்டத்தில் அவர் பேசியிருப்பதாவது, பாரத் மாதா கி ஜெய் என்று கூற மறுப்பவர்களின் தாடையை உடையுங்கள். இந்துஸ்தானில் பிறந்து வளர்ந்து, இறந்த பிறகு இங்கு புதைக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் பாரத் மாதா கி ஜெய் என்று கண்டிப்பாக கூற வேண்டும் என்றார். அகர்வாலின் இந்த பேச்சு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.