ஜார்கண்டில் இரண்டு முஸ்லிம்கள் படுகொலை:கொலையாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம்ஜார்கண்ட் மாநிலம் லதேகர் மாவட்டத்தில் கால்நடை வியாபாரம் செய்து வந்த மஜ்லூம் அன்சாரி மற்றும் இம்தியாஸ் கான் ஆகியோர் கடந்த மார்ச் 18 ஆம் தேதி ஒரு கும்பலால் தூக்கில் ஏற்றி கொலை செய்யப்பட்டனர். இவர்களது கொலைக்கான காரணம் கால்நடைகளை கொள்ளையடித்து செல்வது என்று காவல்துறை கூறிவந்தது. ஆனால் குற்றவாளிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அவர்கள் பசு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் இந்த கொலைக்கு பின்னால் பசு மாட்டு அரசியலே இருக்கின்றது என்றும் தெளிவாக தெரியவருகிறது.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் பஜ்ரங் தளத்தை சேர்ந்த அருண் சாவ் என்பவர் தான் இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்றும் இன்னும் அந்த இருவரையும் அடித்து துன்புறுத்தி தூக்கில் இட்டு கொலை செய்ததே இந்த அருண் சாவ் தான் என்றும் கூறியுள்ளனர். ஒரு செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த இவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் மூலம் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த கொலை நடந்த ஒரு நாளிலேயே குற்றவாளிகளில் மனோஜ் குமார் சாஹு, மிதிலேஷ் பிரசாத் சாவ் என்கிற பண்டி, பிரமோத் குமார் சாவ், மனோஜ் சாவ், மற்றும் அவ்தேஷ் சாவ் ஆகிய ஐந்து பேரை காவல்தறை கைது செய்திருந்தது. மற்ற மூன்று பேர் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேர் தங்கள் வாக்குமூலங்களில் அருண் சாவ் தான் இந்த கொலைகளை செய்தான் என்று கூறியுள்ளனர்.
குற்றவாளிகளில் மற்றொருவனான மிதிலேஷ் சாவ் என்ற பண்டி தான் செய்தது அனைத்தும் தனக்கு Gau Raksha Samiti எனும் பசு பாதுகாப்பு அமைப்பு தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பின் காரணத்தால் செய்தது என்று கூறியுள்ளான். இதிலிருந்து இந்த கொலை முற்றிளுமாக பசு அரசியலை முன்னிறுத்தியே நடைபெற்றுள்ளது என்று தெரிய வருகிறது.

கைது செய்யப்பட்டவர்களின் கூற்றுப்படி இந்த 8 பேர் கொண்ட கும்பல் இரு குழுக்களாக பிரிந்துள்ளனர். நான்கு பேர் கொண்ட கும்பல் மஜ்லூம் அன்சாரி மற்றும் இம்தியாஸ் கான் ஆகியோரை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளது. மற்ற நான்கு பேர் இவர்கள் ஓட்டி வந்த கால்நடைகளை அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு விரட்டிச் சென்று அங்கே அவைகளை கட்டி வைத்துள்ளார். இவர்கள் கொள்ளையர்கள் என்றால் கால்நடைகளை கடத்திச்சென்று கட்டி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

மனோஜ் சாவ், பிரமோத் குமார், சஹ்தேவ் சோனி மற்றும் அருண் சாவ் ஆகிய நன்கு பேர் மஜூல்ம் அன்சாரி மற்றும் இம்தியாஸ் கான் ஆகிய இருவரின் கைகளை கட்டி அவர்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி காட்டுப்பகுதிக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கே இருவரையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின்னர் அருண் சாவ் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று கயிறு வாங்கி வந்து இருவரையும் தூக்கில் ஏற்றிக் கொன்றுள்ளான். இவை குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல். இந்த அருண் சாவ் பஜ்ரங் தளத்தின் அப்பகுதி பொறுப்புதாரி எனவும் அங்கு பஜ்ரங் தள் பிரகாந்த் பிரமுக் என்று ஒரு போர்ட் வைக்கப்பட்டிருந்தது என்றும் இந்த கொலை சம்பவத்திற்கு பிறகு திடீரென அந்த போர்ட் அகற்றப்பட்டு விட்டது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து இது வரை இது வெறும் கொள்ளை சம்பவத்தில் ஏற்பட்ட கொலை என்று கூறிவந்த காவல்துறையினரிடம் கருத்து கேட்ட பொழுது, இந்த வழக்கை அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்வோம் என்றும் தற்பொழுது எந்த ஒரு முடிவிற்கும் வர முடியாது என்றும் லதேகர் காவல்துறை கண்காணிப்பாளர் அனுப் பிர்தரே கூறியுள்ளார்.

மேலும் அருண் சாவ் வின் பஜ்ரங் தள ஈடுபாடு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அவர் காவல்துறை இந்த கொலையை கொள்ளை சம்பவத்தோடு தொடர்பு படுத்தவே இல்லை என்று கூறியுள்ளார். இன்னும் இந்த வழக்கு தொடர்பாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.