பாகிஸ்தானில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பஸ் தப்பிக்க போராடிய பயணிகள்- வீடியோபாகிஸ்தான் நாட்டில் தொடர்மழை காரணமாக பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள அபாயகரமான காரகோரம் நெடுஞ்சாலை துண்டிக்கபட்டு உள்ளது.இந்த சாலையில் சென்ற பயணிகள் பஸ் ஒன்று ஒன்று அந்தவழியாக கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது பஸ் பெரு வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டது இதில் பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் உயிர் தப்ப போராடிய சம்பவம் ணீப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கு வந்த போது திடீரென்று பெருவெள்ளம்அப்பகுதியை சூழ்ந்த்தாகவும், இதை முற்றிலும் எதிர்பார்க்காத ஓட்டுனரால் பேருந்தை நிறுத்த முடியாமல் போனதாகவும், அதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பயணிகளுடன் பெருவெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்வத்தால் அதிர்ச்சியடைந்த பேருந்து பயணிகள் உயிர் தப்பிக்ககடுமையாக போராடியுள்ளனர். இறுதியில் பேருந்தின் ஜன்னலை உடைத்து அதுவழியே அனைத்து பயணிகளும் உயிர் தப்பியுள்ளனர்.

காரகோரம் மலைப்பகுதியைச் சுற்றி பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகளை இந்த நெடுஞ்சாலை இணைக்கின்றது. உலகில் மிகவும் ஆபத்தான நெடுஞ்சாலைகளில் இதுவும் ஒன்று. இதுவரை இந்த நெடுஞ்சாலையில் பெருவெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட விபத்துகளில் சிக்கி பாகிஸ்தானியர்கள் 810 பேரும் சீனர்கள் 82 பேரும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.