முத்துப்பேட்டை அருகே தேங்காய் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததுமுத்துப்பேட்டை அருகே தேங்காய் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனத்திலிருந்து மதுக்கூரை சோந்த லாரி தேங்காய் ஏற்றிக்கொண்டு பேராவூரணிக்கு புறப்பட்டு சென்றது. லாரி கோபாலசமுத்திரம் வழியாக முத்துப்பேட்டை நோக்கி கிழக்குகடற்கரை சாலையில் ஆலங்காடு பைபாஸ் வளைவு அருகே திருப்பும்போது நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. இதனால் தேங்காய்கள் சாலைகள் முழுவதும் சிதறி கிடந்தன. இதனால் நீண்ட நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டி வந்த மதுக்கூரை சேர்ந்த டிரைவர் கார்த்திக் உட்பட 3 பேர் லேசான காயமடைந்தனர். இதுபற்றி முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

 

lory

 

 
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.