கடவுளே... வேட்பாளர் லிஸ்டுல என் பேரு வரக் கூடாது!- பாஜகவினரின் பறிதாபம்....தேர்தலையொட்டி பாஜக சார்பில் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், திடீரென விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார். தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாருடனான கூட்டணி பேச்சுவார்த்தையும் தோல்வியை தழுவியது. இதனால், பாஜக முற்றிலும் வலு விழந்துவிட்டதாக அக்கட்சியினர் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். 45 வேட்பாளர்களின் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில், விருப்ப மனு அளித்தவர்கள் இப்போது வேட்பாளர் பட்டியலில் தங்களது பெயர் இல்லாமல் போனால் நல்லதுதான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இரு கட்ட நேர்காணல் முடிவடைந்த நிலையில், முழுமையான பட்டியல் வெளியிடப்படாமல் உள்ளது. ஆனால், 234 தொகுதிகளுக்கும் பட்டியல் தயாராகிவிட்டதாக செய்திகள் வெளி வருகிறது. பட்டியலில் யாருடைய பெயர் இருக்கிறது என்பதே தெரியவில்லை.

வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு மட்டுமே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜகவுக்கு பலம் இல்லாததால், கூட்டணியில் இணைய அனைத்து கட்சிகளும் மறுத்துவிட்டது. இதனால், எதிர்பார்த்த ஒருசில வாக்குகளும் கிடைக்காது. பாஜக சார்பில் போட்டியிடுபவர்கள் பணம் செலவு செய்தாலும், தேர்தலில் வெற்றி பெற முடியாது. எனவே, வேட்பாளர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் வரக்கூடாது என வேலூர் மாவட்ட பாஜகவில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் கோயில் கோயிலாக ஏறி இறங்குகிறார்களாம். - See more at: http://election.dinakaran.com/Election_NewsDetail.asp?Nid=1608#sthash.TJgQWbFz.dpuf
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.