ஏர்வாடி அருகே சுறா மீன்களுடன் வேன் கவிழ்ந்து விபத்து!ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சுறா மீன்களுடன் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பூம்புகாரில் இருந்து தூத்துக்குடிக்கு டாட்டா ஏசி வேனில்(குட்டியானை) சுமார் 4மீட்டர் நீளமும் தலா 400கிலோ எடை கொண்ட 10சுறா மீன்களை ஏற்றி சென்றுள்ளனர். இந்த வேன் ஏர்வாடி அருகே சென்றபோது பின்னால் உள்ள ஒரு டயர் வெடித்து நிலை தடுமாறி கீழே கவிழ்ந்தது. அப்போது அவர்கள் ஏற்றி வந் சுறா மீன்கள் கிழேவிழுந்து சிதறியது.

இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் ராமநாதபுரம் வனசரகர் கணேசலிங்கத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து அவரின் உத்தரவின் பேரில் கீழக்கரை வனவர் இன்னாசி முத்து வனகாப்பாளர்கள் காதர் மஸ்தான், சடையாண்டி, வேட்டை தடுப்பு காவலர் மகேந்திரன் உள்ளிட்டவர்கள் சென்று சுமார் 4 ஆயிரம் கிலோ எடை உள்ள 10 சுறா மீன்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து டிரைவர் பூம்புகாரை சேர்ந்த நடேசன் மகன் சுரேஷ் (29), மற்றும் அதே ஊரை சோந்த கனராஜ் மகன் கவி (17), நாகபட்டிணத்தை சேர்ந்த மோகன்தாஸ் மகன் முத்துகுமார் (27) ஆகியோரிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து வனவர் இன்னாசி முத்து கூறுகையில்… 2 மீட்டர் மற்றும் அதற்மேல் நீளம் உள்ள சுராமீன்கள் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இம்மீன்கள் தடை செய்யப்பட்ட இனங்களில் உள்ளதா என விசாரித்து வருகிறோம் என்றார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.