கொல்லம் தீ விபத்தில் தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் உபயோகம் ! அதிர்ச்சி தகவல்109 பேரை பலி கொண்ட கொல்லம் தீ விபத்தில், தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் பரவூர் என்ற இடத்தில் உள்ள புட்டிங்கல் என்ற அம்மன் கோவில் திருவிழாவின் போது, பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தால் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர். 383 பேர் பலத் தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பட்டாசு வெடிக்கும் நிகழ்வின் ஒப்பந்ததாரர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுரேன்தரன் மற்றும் கிருஷ்ணன் குட்டி என்ற இருவர் பட்டாசு வெடிக்கும் நிகழ்வுக்கு ஒப்பந்தம் பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் கோயில் நிர்வாகத்தினர் 15 பேர் உட்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே வெடி மருந்து பொருட்களின் தலைமை கட்டுபாட்டாளர் சுதர்ஷன் கமல் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் விபத்து நடந்த இடத்தையும் வெடிபொருட்களையும் ஆய்வு செய்தனர். புட்டிங்கல் கோயிலில் பட்டாசு வெடித்ததில், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக சுதர்ஷன் கமல் கூறினார்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.