மோடி அரசின் அடுத்த இலக்கு தப்லீக் ஜமாஅத்'தை தடை செய்ய முயற்சி....தப்லீக் ஜமாஅத்'தை தடை செய்ய முயற்சி : வெளிநாட்டு ஜமாத்துக்களை வெளியேற்ற மாநிலங்களுக்கு உத்தரவு !

மோடி அரசின் அடுத்த இலக்கு 'தப்லீக் ஜமாஅத்'தை தடை செய்வதை நோக்கி செல்கிறது, முதல் கட்டமாக வெளிநாட்டு ஜமாத்தினர் அனைவரையும் உடனடியாக

வெளியேற்றுமாறு மாநிலங்களுக்கு, உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுகுறித்து 'ஏசியன் ஏஜ்' பத்திரிகையில் வந்துள்ள செய்திவாது :

'தப்லீக் ஜமாஅத்' சேவைக்காக 'சுற்றுலா விசா'வில் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் மூலம், மோடி அரசுக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் 'வெளிநாட்டு ஜமாஅத்'துக்களை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரவேண்டுமென்றும் மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

சாதாரண முஸ்லிம்களை, இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் நம்பிக்கையுள்ள முஸ்லிம்களாக மாற்றும், தப்லீக் ஜமாஅத்'தின் முயற்சி, இந்திய இறையாண்மைக்கு சவால் விடுவதாக அமையக்கூடும் என்று மாநிலங்களை எச்சரித்துள்ளது, உள்துறை அமைச்சகம்.

வெளிநாட்டு ஜமாத்தினரை அடையாளம் கண்டு அவர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டியது மாநில அரசுகளின் கடமை என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக 'ஏசியன் ஏஜ்' செய்தி, குறிப்பிடுகிறது.


 

Thanks To ; ஏசியன் ஏஜ்
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.