இந்த செய்தி உங்களுக்கு கண்டிப்பாக ஆறுதலாக இருக்கும்.....வெப்ப சலனம் காரணமாக, வரும் 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக, சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக அதிகரித்த நிலையில், வரும் 24 மணி நேரத்தில், வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில், கிழக்கு மற்றும் தென்கிழக்கு திசையில் ஓரளவு ஈரப்பதம் கலந்த காற்று வீசும் என்பதால், வெப்பத்தின் அளவு சற்று குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 24 மணி நேரத்தில், கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 55 கிலோ மீட்டர் வேகத்தில் கடல் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.