மாணவியிடம் அத்துமீறிய காஷ்மீர் ராணுவம்! தட்டி கேட்ட மூவர் சுட்டுகொலை !12-04-16   அன்று  காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா நகரில் உள்ள ராணுவ சோதனைச்சாவடி ஒன்றில் பணியாற்றும் ராணுவ வீரர் அருகில் உள்ள பொது கழிப்பறையில் பள்ளி மாணவி ஒருவர் உள்ளே சென்ற பின் அதை தொடர்ந்து சென்றுள்ளார் .

அதை பார்த்த பொதுமக்கள் ராணுவ வீரரை நையப் புடைத்துள்ளனர் மேலும் அதே சோதனைச்சாவடியில் உள்ள ராணுவ வீரர்கள் மீது கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டதில் ஈடுபட்ட கும்பல் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 3 வாலிபர்கள் பலியானார்கள்,பலர் காயமடைந்தனர்.

பலியானவர்கள் பெயர் இக்பால் அகமது மற்றும் நயீம் பட் என்று செய்திகள் வட்டாரம் தெரிவிக்கின்றது .மூன்று நபர்களும் பலியானவுடன் ராணுவத்தினர் அங்கிருந்து ஓடி விட்டனர். பின்னர், ராணுவ பதுங்கு குழிக்கு போராட்ட கும்பல் தீவைத்தது. அங்குள்ள போலீஸ் நிலையம் மீது கல் வீசியது. கும்பலைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகளை வீசினர்.

காஷ்மீர் மாநிலத்தின் பல இடங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. மேலும் 35 க்கும் மேற்பட்ட காஷ்மீர் வாலிபர்களை விசாரணை என்று காவல்துறை அழைத்து சென்றுள்ளது. ஜமாத்தே இஸ்லாமி ஜம்மு&காஷ்மீர் உட்பட பல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.