இலவச பொருட்கள் இல்லாத தி.மு.க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கலைஞர்!



திமுக தேர்தல் அறிக்கையை அண்ணா அறிவாலாயத்தில் கருணாநிதி வெளியிட்டார். 72 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு, துரைமுருகன், ஆர்.எஸ்.பாராதி, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கம் தென்னரசு ஆகியோர் உடனிருந்தனர்
தேர்தல் அறிக்கை விவரம்:

1. மதுவிலக்கை அமல்படுத்த சட்டம்
* மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* மதுவிலக்கு இழப்பை ஈடுகட்ட உரிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

* மது விற்பனை செய்யும் டாஸ்மாக் நிறுவனம் கலைக்கப்படும் என அறிவிப்பு.

* டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பு அளிக்கப்படும்..

* மதுவுக்கு அடிமையானோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு.

2. விவசாயக் கடன் தள்ளுபடி

* சிறு, குறு விவசாயக் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்.

* வேளாண்மைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும்.

* வேளாண் பொருள்களை சந்தைப்படுத்த புதிய கொள்ளை.

* வேளாண் பொருள் உற்பத்தியாளர்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்பனை செய்ய வசதி செய்யப்படும்.

* நெல்லுக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 2,000-ஆக நிர்ணயிக்கப்பட்டு படிப்படியாக ரூ. 2,500-ஆக உயர்த்தப்படும்.

* கரும்புக்கு டன் ஒன்றுக்கு வண்டிச்சத்தம் ரூ. 1,200 சேர்த்து ரூ. 3,500 வழங்கப்படும்.

* நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும்.

* கொடைக்கானலில் தோட்டக்கலை ஆய்வு மையம்.

* ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி நாள் 150-ஆக அதிகரிப்பு.

* கூடுதலாக சேர்க்கப்படும் 50 நாட்கள் விவசாயப்பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும்.

* மகளிருக்கு 9 மாதம் பேருகால விடுமுறை அளிக்கப்படும்.

* அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழு அமைக்கப்படும்.

* பணிக்காலத்தில் இறக்கும் அரசு பணியாளர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதி அளிக்கப்படும்.

* உயிரிழந்த மக்கள் நல பணியாளர் குடும்பத்துக்கு நிவாரண நிதிதலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.

* 25 ஆண்டுகள் பணி முடித்த அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படும்.

அறிஞர் அறிஞர் உணவகம்

* ஏழை மக்களுக்கு வசதிக்காக அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்.

ஆவின் பால் விலை குறைப்பு

* ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் குறைக்கப்படும்.

* கூட்டுறவு பால் உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் பால் முழுவதும் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும்.
Share on Google Plus

0 comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.